எனக்கு ‘அம்மா’ மாதிரி.. இது தான் கடவுள் போட்ட உத்தரவு..! கங்கை கரையில் கண் கலங்கிய பிரதமர் மோடி..!
லக்னோ: உத்திர பிரதேச மாநிலம் வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக கங்கை நதியில் சிறப்பு பூஜைகள் செய்தார். அப்போது தாயைப் பற்றி பேசியவர் கண்கள் கலங்கி விம்மி அழுதபடியே பேசினார்.
நாடு முழுவதும் லோக் சபா தேர்தலானது ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. உலகின் மிகப்பெரிய தேர்தல் திருவிழாவில் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர்.

இதுவரை நான்கு கட்ட தேர்தல்கள் நடந்திருக்கும் நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி வாக்குப்பதிவும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி: இந்த நிலையில் குஜராத்தை சொந்த மாநிலமாகக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தற்போது உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். வாரணாசி தொகுதியில் ஏழாவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நடக்க இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் தொகுதி என்பதால் தேசிய அளவில் வாரணாசி தொகுதி முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாரணாசி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல்: அவருடன் உபி முதல்வர் யோகி ஆதித்ய நாத், உத்தர பிரதேச மாநில பாஜக தலைவர் சவுத்ரி பூபேந்திர சிங், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, அன்புமணி, ஜி.கே.வாசன் உள்ளிட்ட NDA தலைவர்கள் வேட்பு மனு தாக்கலுக்கு உடன் சென்றிருந்தனர். வாரணாசி தொகுதியில் 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்ற நிலையில் இந்த முறையும் அவரது வெற்றி நிச்சயம் என பாஜகவினர் கூறி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் அஜய் ராய் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து களமிறங்கும் நிலையில் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது.
கங்கை நதி: இந்த நிலையில் வேட்புமனு தாக்கலுக்கு முன்னதாக கங்கை நதியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார். வேத மந்திரங்கள் முழங்க பூக்களை தூவி பிரதமர் மோடி வழிபட்டார். அப்போது கங்கை நதி குறித்து பிரதமர் மோடி உருக்கமாகப் பேசினார். கங்கை நதி என்னை தத்தெடுத்துக் கொண்டது. எனது தாய் மறைவுக்கு பின் கங்கை குறித்து நெருக்கமாக உணர்கிறேன். கங்கை நதி தான் என்னை வலுப்படுத்தியது.
கண்கலங்கிய மோடி: கங்கை நதி தாயைப் போல அனைவரையும் காக்கிறது. 140 கோடி மக்களுக்காக நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன் இது கடவுளின் உத்தரவு என பேசினார். அப்போது தாய் என குறிப்பிட்டபோது பிரதமர் நரேந்திர மோடி கண் கலங்கினார். சிறிது நேரம் தலையைக் குனிந்தவாறு அமைதியாக இருந்த அவர் ஒருவாராக தேற்றிக்கொண்டு மீண்டும் அவர் பேசிய போது அவரது குரல் தழுதழுத்தது. தொடர்ந்து விம்மியபடியே பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ராகுல் விமர்சனம்: தற்போது இந்த வீடியோவை பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி அழுவார் என ராகுல் காந்தி பேசியதை வைத்து காங்கிரஸ் கட்சியினர் விமர்சித்தும் வருகின்றனர். கடந்த சில நாட்களாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரையின் போது மிகவும் பதட்டமாக இருப்பதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் விட வாய்ப்பிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த வாரம் கூறியிருந்த நிலையில், அதனை வைத்து விமர்சனம் எழுந்துள்ளது.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications