சிகரெட் சூடு..சீக்ரெட் இடத்தில் கீறல்.. லோ பட்ஜெட் சொர்ணாக்கா மெஹர்.! கணவனை கட்டிப் போட்டு சித்ரவதை!
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனுக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரை கட்டிப்போட்டு கொடுமை செய்துள்ள பெண் தற்போது போலீசில் சிக்கியுள்ளார். உடலில் சிகரெட்டால் சூடு வைத்தும் பிறப்புறுப்பில் கத்தியால் அறுத்தும் கொடுமை செய்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் எப்போதும் மூழ்கிக் கிடக்கும் பெண்கள் மற்றும் ஆண்களால் கள்ளக்காதல் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது சமீப காலங்களாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கொலை இல்லாவிட்டால் டார்ச்சர் செய்வதும் நடப்பதுண்டு.

கள்ளக்காதல் விவகாரத்தில் தன்னை கண்டித்த துணையை மிகக் கொடூரமாக சித்ரவதை செய்திருக்கிறார். மனைவியை டார்ச்சர் செய்திருப்பார் என நீங்கள் நினைக்கலாம் ஆனால் அப்படி கிடையாது இந்த விஷயத்தில் நிலைமை அப்படியே தலைகீழ்..கணவனைத்தான் மனைவி டார்ச்சர் செய்திருக்கிறார்
கள்ளக்காதல்: ஒரு சில நாட்கள் பழகிய கள்ளக்காதலுக்காக கட்டிய கணவனை இப்படியெல்லாம் கொடுமை செய்ய முடியுமா என்று தான் நினைக்கத் தோன்றுகிறது அந்த வீடியோவை பார்க்கும் போது. உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்த மெஹர் ஜஹான் என்பவர் தான் இந்த வீடியோவில் சிக்கி தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் அந்தப் பெண். மெஹரும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

இளம்பெண்: பூப்போல சென்று கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் கள்ளக்காதலன் வடிவில் புயல் வீசியது. சமூக வலைதளம் மூலம் பழகிய அவருடன் நெருக்கமாக பழக தொடங்கி இருக்கிறார் மெஹர். அது ஒரு கட்டத்தில் கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இதனை அறிந்து கொண்ட கணவன் அந்த பெண்ணை கண்டித்து இருக்கிறார் ஆனாலும் அதனை கேட்காத மெஹர் ஜஹான் தொடர்ந்து அந்த இளைஞர் உடனான கள்ளக்காதலை தொடர்ந்திருக்கிறார்.
ரகசிய கேமரா: ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை கைமீறி செல்ல பெண்ணின் வீட்டில் புகார் செய்திருக்கிறார் இளைஞர் அப்படி இருந்தும் மெஹர் ஜஹான் கேட்கவில்லை. இது தொடர்பாக பலமுறை இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் இரவு தூங்கி எழுந்த பின் தன் உடலில் காயமாகவும் மிகவும் களைப்பாகவும் இருப்பதை உணர்ந்த அந்த இளைஞர் தன்னை தனது மனைவி ஏதோ செய்கிறார் என உணர்ந்திருக்கிறார். இதனையடுத்து மனைவிக்கு தெரியாமல் தனது வீட்டின் படுக்கை அறையில் கேமரா ஒன்றை வாங்கி வைத்திருக்கிறார்.
சைக்கோ மனைவி: இந்த நிலையில் தான் தற்போது அந்த வீடியோ காட்சிகளை காவல்துறை அதிகாரிகளிடம் கொடுத்து தன்னை கொடுமை செய்த மனைவியை கம்பி எண்ண வைத்திருக்கிறார் கணவர். அந்த வீடியோவில் பாலில் போதை மருந்தை கலந்து கொடுத்து கணவரை மயக்கமடைய செய்த மெஹர் ஜஹான் அவரது கை கால்களை கட்டி போட்டு கொடூரமாக தாக்கி இருக்கிறார். மேலும் ஒரு சைக்கோவை போல சிகரெட் புகைத்துக் கொண்டு அவரது மார்பில் ஏறி உட்கார்ந்து கொண்டு உடல் முழுவதும் சூடு வைத்திருக்கிறார். கொடூரத்தின் உச்சமாக அவரது பிறப்புறுப்பை கத்தியால் கீரி கொடுமைப்படுத்தி இருக்கிறார்.

மனைவி கைது: இதையடுத்து இந்த வீடியோ காட்சிகளை காவல்துறையிடம் கணவன் ஒப்படைக்க, சைக்கோ தனமாக நடந்து கொண்ட மனைவியை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். மேலும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மெஹர் ஜஹானின் கள்ளக்காதலனை தேடி வருவதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவ மெஹர் ஜஹான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications