Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது.. மோடிக்கு ஷாக் தந்த சத்திரியர்கள்! உபி பஞ்சாயத்தில் முடிவு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது, பாஜகவை வீழ்த்த வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று அங்கே ராஜ்புத் உள்ளிட்ட சத்திரிய சாதியினரின் பஞ்சாயத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

முசாபர்நகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கேடா கிராமத்தில் நடைபெற்ற ராஜ்புத் சமூகத்தின் மகாபஞ்சாயத், உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள முதல்கட்ட பொதுத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. வேலையின்மை, அக்னிவீர் திட்டம் மற்றும் ராஜ்புத் சமாஜ் அவமதிப்பு போன்ற காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர்.

Rajputs should not vote for BJP candidates decided in UP Maha Panchayat

நாங்கள் யோகியை எதிர்க்கவில்லை. ஆனால் டெல்லியில் இருக்கும் பாஜகவின் பெரிய தலைகளை எதிர்க்கிறோம்.

சிவால் காஸ் (பாக்பத்), சர்தானா (மீரட்) மற்றும் கட்டௌலி (முசாபர்நகர்) ஆகிய தொகுதிகளின் கீழ் வரும் 24 கிராமங்களின் கூட்டமைப்பான "சௌபிசி" ஏற்பாடு செய்திருந்த மகாபஞ்சாயத்தின் போது, ​​ராஜ்புத் அதிகாரத்தை அடையாளப்படுத்தும் -சமாஜ்வாதி வேட்பாளருக்கு மட்டுமே தங்கள் ஆதரவை அளிக்க வேண்டும்.

அவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த வி.பி.சிங் மற்றும் சந்திரசேகர் ஆகிய இரு முன்னாள் பிரதமர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு ஏன் இன்னும் பாரத ரத்னா வழங்கப்படவில்லை என்று நேற்று பஞ்சாயத்தில் பேசப்பட்டது.

முசாபர்நகர் கலவரம் தொடர்பாக 2013ல் இதே மைதானத்தில் இதேபோன்ற பஞ்சாயத்து நடத்தப்பட்டதையும் அந்த மகாபஞ்சாயது பாஜகவிற்கு ஆதரவாக மாறியது. இதுதான் உபி மாநிலத்தில் பாஜகவின் எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்தது 10 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்பகுதியில் பாஜகவின் வீழ்ச்சிக்கு இதே பஞ்சாயத்து காரணமாகிவிடும் என்று பஞ்சாயத்தில் பேசிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் இருக்கும் பெரும் தலைகள் யோகி-ஜி சொல்வதைக் கேட்கவில்லை. ஆதித்யநாத் சொல்வதை பாஜக தலைமை கேட்பது இல்லை. டெல்லியில் அமர்ந்திருப்பவர்கள் வேட்பாளர்களை இறுதி செய்கிறார்கள் மற்றும் அவர்களின் முடிவு (பாதுகாப்பு அமைச்சர்) ராஜ்நாத் சிங் மற்றும் யோகி மீது சுமத்தப்பட்டு உள்ளது.

என்ன காரணம்: ராஜ்புட் உள்ளிட்ட சத்திரிய வம்சத்து மன்னர்கள் இஸ்லாமியர்களுடன் நெருக்கமாக , அடிமை போல இருந்தனர். இஸ்லாமிய மன்னர்கள் கொடுத்ததை வைத்து ஆட்சி செய்தனர் . தங்கள் பெண்களை கூட இஸ்லாமியர்களுக்கு மனம் முடித்து கொடுத்தனர் என்று விமர்சனம் செய்யும் தொனியில் மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா பேசி இருந்தார். பாஜகவை சேர்ந்த மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலா இதன் மூலம் சத்திரிய வம்சத்து அரசர்களை அவமதித்துவிட்டதாக சத்திரியர் இடையே விமர்சனம் வைக்கப்பட்டது.

மத்திய மந்திரி பர்ஷோத்தம் ரூபாலாவின் கருத்துக்கு எதிராக குஜராத்தில் பாஜகவுக்கு எதிராக 'சத்திரிய' சமூகத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்தான், உத்தரபிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் நேற்று 'சத்திரிய' சமூகத்தினர் பாஜகவிற்கு எதிராக பஞ்சாயத்து நடத்தினர். சத்திரிய சமூகத்தின் நலன்கள் மற்றும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களை 'எதிர்ப்பது' பற்றி இதில் ஆலோசிக்கப்பட்டது.

பாஜகவிற்கு எதிராக செயல்பட வேண்டும் என்று சத்திரிய ஜாதி பிரிவை சேர்ந்த உறுப்பினர்களுக்கு இந்த பஞ்சாயத்தில் அறிவுறுத்தப்பட்டது.

பாஜகவிற்கு எதிராக பஞ்சாயத்து: முன்னதாக சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள நானௌடா என்ற இடத்தில் நடைபெற்ற இந்த பஞ்சாயத்தில் ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சத்திரிய சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டனர். உத்தர பிரதேசம் மட்டுமின்றி நாடு முழுக்க எந்த மாநிலத்திலும் சத்திரியர்கள் பாஜகவிற்கு வாக்களிக்க கூடாது என்று இதில் முடிவு எடுக்கப்பட்டது.

வடஇந்திய பஞ்சாயத்துகளில் எடுக்கப்படும் முடிவுகள், அதில் கலந்து கொள்ளும் எல்லோராலும் மிக தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்பதால் பாஜகவிற்கு இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிசான் மஸ்தூர் சங்கதன் தலைவரும், சமூகத் தலைவருமான தாக்கூர் பூரன் சிங் இது பற்றி கூறுகையில், பாஜக வேட்பாளர்களை தோற்கடிக்க எந்த கட்சிக்கு சிறந்த வாய்ப்பு உள்ளதோ அந்த கட்சிக்கு எங்கள் சமூகத்தினர் ஆதரவளிப்பார்கள். நாங்கள் எப்போதும் பாஜகவை ஆதரித்தோம், ஆனால் அவர்கள் ராஜ்புத் தலைவர்களை ஓரங்கட்டி வருகின்றனர். லோக்சபா தேர்தலுக்கான டிக்கெட் விநியோகத்தில் எங்கள் சமூகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது, என்றுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+