லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அன்று மைக் பிடித்தார்.. இன்று அடிக்கல் நாட்டுகிறார்.. ராமர் கோவிலும்.. மோடியின் 30 வருட சபதமும்!

Google Oneindia Tamil News

லக்னோ: அயோத்தியில் இன்று பிரதமர் மோடி ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டும் நிலையில், அயோத்தி பிரச்சனையை சுற்றி பிரதமர் மோடியின் வாழ்க்கையும், அரசியல் பயணமும் எப்படி மாறியது, என்னவெல்லாம் நடந்தது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்!

Recommended Video

    29 ஆண்டுகளுக்கு பிறகு Ayodhyaக்கு வந்த மோடி

    2019 நவம்பர் 9, இந்தியாவே அந்த தீர்ப்பிற்காக காத்து இருந்தது. நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் அரசியல் சாசன அமர்வு தனது தீர்ப்பை வழங்கியது. அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் ஒரே தீர்ப்பை வழங்கினர்.

    அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. சரியாக 30 வருடம் முன் 1989ல் தொடங்கிய பிரச்சனை ஒன்றுக்கான முற்றுப்புள்ளி அந்த நாளில் வைக்கப்பட்டது.

    ராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி ராமர் கோவில் பூமி பூஜை: உச்சக்கட்ட பாதுகாப்பில் அயோத்தி - வெள்ளி செங்கலை எடுத்து கொடுக்கும் மோடி

    1989ல் என்ன நடந்தது

    1989ல் என்ன நடந்தது

    இந்த அயோத்தி வழக்கில் நவம்பர் 9ம் தேதிதான் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் இருந்து சரியாக 30 வருடம் முன் 1989 நவம்பர் 9ம் தேதிதான் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு அயோத்தி விவகாரத்தை கையில் எடுத்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவிலை கட்டபோகிறோம். எல்லோரும் செங்கல் கொடுங்கள் என்று விஸ்வ இந்து பரிஷத் அதே நாளில்தான் குரல் எழுப்பியது. அப்போதுதான் அயோத்தி பிரச்சனைக்கான முதல் செங்கல் நடப்பட்டது.

    பாஜக கவனம்

    பாஜக கவனம்

    இந்த அயோத்தி விவாகரத்தை தொடங்கி வைத்தது மோடியோ, வாஜ்பாயோ, அத்வானியோ அல்லது முரளி மனோகர் ஜோஷியோ அல்ல. விஸ்வ இந்து பரிஷத் அமைப்புதான். சரியாக சொல்ல வேண்டும் என்றால், அப்போது பாஜகவின் கை பெரிய அளவில் ஓங்கவில்லை. 1984 நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 2 இடங்களை வென்று, திக்கு தெரியாமல் பாஜக நின்றது. அப்போதுதான் சரியாக அயோத்தி பிரச்சனையை விஸ்வ இந்து பரிஷத் கையில் எடுத்தது. விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு நடத்திய இந்த அயோத்தி பிரச்சாரம் நேரடியாக பாஜகவிற்கு பலவகைகளில் பலன் அளித்தது.

    எப்போது தொடங்கிய ஆசை

    எப்போது தொடங்கிய ஆசை

    எந்த திசையில் செல்வது என்று தெரியாமல் சுற்றிக்கொண்டு இருந்த அத்வானி -வாஜ்பாய் இருவருக்கும்.. இதுதான் உங்கள் அரசியலுக்கான கொள்கை, அரசியலுக்கான பாதை என்பதை அயோத்தி காட்டியது. அயோத்தி பிரச்சனை பாஜகவிக்கு தூரத்து வெளிச்சமாக இருந்தது. அயோத்தி பிரச்சனையின் எழுச்சி காரணமாக, தீவிர இந்துக்களின் வாக்குகள் பாஜக பக்கம் திரும்ப தொடங்கியது. ஐந்தே வருடத்தில் 1989 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 89 இடங்களை வென்றது .

    அரசியலை கண்டது

    அரசியலை கண்டது

    வெறும் ஐந்து வருடத்தில் காங்கிரஸ் என்ற இமாலய கட்சிக்கு எதிராக இப்படி வளர முடிந்தது பாஜகவிற்கு நம்பிக்கை அளித்தது. இனி இதுதான் அரசியல் பாதை என்று பாஜக அப்போது முடிவு செய்தது. இதற்கான பிள்ளையார் சுழியை போட்டவர்கள் அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி ஆகிய மூவர். இவர்கள் மூவரும் பாஜகவின் திட்டங்களை செதுக்கிக் கொண்டு இருந்த போது, அப்போது யாருக்கும், தெரியாமல் குஜராத்தில் ஒரு இளைஞர் தனக்கான அரசியல் திட்டங்களை வகுத்துக் கொண்டு இருந்தார்.

    அத்வானி இமேஜ்

    அத்வானி இமேஜ்

    1989 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நம்பிக்கை அளித்தவுடன் பாஜக முழுக்க முழுக்க அயோத்தி பிரச்சனையில் களமிறங்கியது. 1990ல் அத்வானி தன்னுடைய ராம் ரத யாத்திரையை அறிவித்தார். 1990 செப்டம்பர் மாதம் அத்வானியின் ராம் ரத யாத்திரை தொடங்கியது. இதன்நோக்கம் ஒன்றுதான்.. அயோத்தியில் அந்த குறிப்பிட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவது. இதற்காக மக்களை ஒன்றிணைப்பது. விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் கொள்கையை சுவீகரித்துக் கொண்ட அத்வானி ராம் ரத யாத்திரையில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார்.

    ரத யாத்திரை தொடங்கியது

    ரத யாத்திரை தொடங்கியது

    குஜராத்தில் இருக்கும் சோம்நாத் பகுதியில் அத்வானி தனது ராம் ரத யாத்திரையை தொடங்கினார் . அங்கிருந்து மத்திய இந்தியா வழியாக உத்தர பிரதேசம் சென்று பின் அயோத்திக்கு செல்வதுதான் இந்த யாத்திரையின் நோக்கம். அயோத்தி பிரச்சனையை மையமாக வைத்து வடஇந்திய அரசியலை மாற்றியது இந்த ராம் ரத யாத்திரைதான். இந்த ரத யாத்திரை மூலம் அத்வானி ஒரு புனிதர், இந்துக்களை மீட்க வந்தவர், பாதுகாவலர் என்ற பெரிய பிம்பத்தை அடைந்தார்.

    மோடி பெரியதாக இல்லை

    மோடி பெரியதாக இல்லை

    அத்வானியின் பிம்பம் மக்கள் மத்தியில் உயர்ந்த அதே நேரத்தில், யாருக்கும் தெரியாமல், அத்வானிக்கு மைக் பிடித்தபடி குஜராத் ராம் ரத யாத்திரையில் மெல்லிய தாடி வைத்த இளைஞர் ஒருவர் கலந்து கொண்டார். அவர்தான்.. நரேந்திர தாமோதர்தாஸ் மோடி.. அத்வானியின் ராம் ரத யாத்திரையை சோம்நாத்தில் இருந்து மும்பை வரை ஒருங்கிணைக்கும் பொறுப்பை அத்வானி மோடிக்கு வழங்கி இருந்தார். சரியாக சொல்லவேண்டும் என்றால் அன்று மோடியை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அரசியலில் வளர துடிக்கும் ஒரு இளைஞர் என்றுதான் அவரை எல்லோரும் பார்த்தனர்.

    மோடி இமேஜ்

    மோடி இமேஜ்

    அதிலும் அத்வானிக்கு கூட மோடி மீது பெரிய விருப்பம் இல்லை. மோடியை விட அத்வானி கேசுபாய் பட்டேல், ஷங்கர்சின் வாஹ்லா , காசிராம் ராணா போன்ற மக்கள் ஆதரவு பெற்ற இளைஞர்களையே ஆதரித்தார். அப்போதே மோடிக்கும் அத்வானி மீது பெரிய பிடித்தம் இல்லை. மோடிக்கு அத்வானியை விட முரளி மனோகர் ஜோஷி மீதுதான் அதிக மதிப்பும், மரியாதையும் இருந்தது. ரத யாத்திரை நடத்த சமயத்தில் பாஜகவை தாண்டி, மோடியை அப்போது பெரிதாக யாருக்குமே தெரியாது என்றுதான் கூற வேண்டும். ஆனால் அந்த இளைஞரின் உள்ளே.. நிறைய அரசியல் திட்டங்கள் இருந்தது, இந்திய அரசியலில் அலையை உண்டாக்கும் திட்டங்கள் இருந்தது.

    கோத்ரா நடந்தது

    கோத்ரா நடந்தது

    அப்படியே பாஸ்ட்பார்வேட் செய்தால்.. அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, அமித் ஷா, முரளி மனோகர் ஜோஷி என்று பலரின் உதவியோடு குஜராத் முதல்வராக 2001ல் மோடி பதவி ஏற்றார். ஆனால்... ஆனால் அப்போதும் கூட பாஜகவின் எதிர்காலமாக மோடியை யாரும் பார்க்கவில்லை. வாஜ்பாய், அத்வானி அளவிற்கு மாஸ் இமேஜ் மோடிக்கு இல்லை. தேசிய அளவில் மோடியை யாருக்கும் பெரிதாக தெரியவில்லை. ஆனால் 2002 பிப்ரவரி 27ம் தேதி நடந்த சம்பவம் ஒன்று மோடியின் வாழ்க்கையை மாற்றியது. தேசிய அளவில் மட்டுமின்றி, உலக அளவில் மோடியின் பெயரை (கெட்டவிதமாகவும் - நல்ல விதமாகவும்) கொண்டு சென்றது.

    2002 கோத்ரா சம்பவம்

    2002 கோத்ரா சம்பவம்

    2002 பிப்ரவரி 27ம் தேதி குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதை தொடர்ந்த கலவரமும் இந்தியாவை புரட்டிப் போட்டது. 2000 பயணிகள் சென்ற ரயிலுக்கு வன்முறையாளர்கள் மூலம் தீ வைக்கப்பட்டது. அயோத்திக்கு சென்று வந்த இந்து துறவிகள், பக்தர்கள் 59 பேர் இந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அயோத்திக்கு சென்று பூர்ணஹத்தி மஹா யாகம் செய்துவிட்டு திரும்பியவர்களின் ரயில்தான் இப்படி தீ வைக்கப்பட்டது.

    வாஜ்பாய் என்ன சொன்னார்

    வாஜ்பாய் என்ன சொன்னார்

    ஏற்கனவே நிலவி வந்த அயோத்தி பிரச்சனையோடு, இந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் சேர்த்து வைத்து பார்க்கப்பட்டது. அயோத்தி துறவிகள் கொல்லப்பட்டதாக இந்து அமைப்புகள் கோபம் கொண்டது. பெரிய அளவில் வேகம் எடுக்காத மோடியின் அரசியல் பயணத்தில் அது கருப்பு புள்ளியாக மாறியது. 2004 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்வி அடைய 2002 குஜராத் கலவரம்தான் காரணம் என்று கூட பார்க்கப்பட்டது. ஏன் வாஜ்பாயே தொலைக்காட்சி பேட்டி ஒன்றில்.. ''குஜராத் கலவரத்தை மோடி கட்டுப்படுத்தி இருக்கலாம் . இதனால்தான் தேர்தலில் தோற்றுவிட்டோம்.. அவரை அப்போதே பதவியில் இருந்து நீக்கி இருக்க வேண்டும்'' என்று கூறினார்.

    பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை

    பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை

    அப்போது மோடிக்கு எதிராக பாஜக தலைவர்களே எதிர்த்து பேசிய போது, அத்வானி மட்டுமே, ஏனோ மோடிக்கு ஆதரவாக பேசினார். ஆனால் மோடியின் அரசியல் அதோடு முடியவில்லை. அடுத்த 13 வருடங்கள் வளர்ச்சி - இந்துத்துவா என்று இரண்டு பாலங்களுக்கு இடையே தனது கனவு கோட்டையை குஜராத்தில் எழுப்பினார். இந்துத்துவம் - கார்ப்பரேட் வளர்ச்சி என்று இரண்டின் மூலம் குஜராத்தையும் முன்னேற்றினார், தன்னுடைய அரசியல் பலத்தையும் முன்னேற்றினார். எங்கே சறுக்கினாரோ அங்கேயே தனது அரசியல் கோட்டையை மோடி எழுப்பினார்.

    ஆர்வம் இல்லை

    ஆர்வம் இல்லை

    2013-14ல் தேசிய அரசியலுக்கு வர நினைத்த போது, மோடி பெரிய அளவில் இந்துத்துவம் மீது கவனம் செலுத்தவில்லை. தன்னுடைய அரசியல் பிரச்சாரத்தில் குஜராத் மாடலை முன்னிறுத்தியவர், பெரிய அளவில், ராமர் கோவில் குறித்தோ, அயோத்தி பிரச்சனை குறித்தோ பேசவில்லை. அயோத்தி பிரச்சனை - கோத்ரா ரயில் எரிப்பு என்ற பிம்பம் அவர் மீது இருந்த காரணத்தாலோ என்னவோ அதை பற்றி மோடி பெரிதாக எங்கும் பேசவில்லை. தான் அயோத்தி யாத்திரையில் கலந்து கொண்டதை அவர் விருப்பப்பட்டு வெளியே தெரிவிக்கவில்லை என்று பாஜக தலைவர்கள் கூறுவது உண்டு.

    அயோத்யா செல்லவில்லை

    அயோத்யா செல்லவில்லை

    அவ்வளவு ஏன், 2014 மற்றும் 2019 தேர்தல் பிரச்சாரங்களை வெற்றிகரமாக 100க்கும் அதிகமான இடங்களில் செய்த மோடி, ஒருமுறை கூட, அயோத்தியில் அந்த சர்ச்சைக்குரிய இடத்திற்கு செல்லவில்லை. 2014ல் லோக்சபா தேர்தலில் பாஜக உத்தர பிரதேசத்தில் மாபெரும் வெற்றிபெற்ற போது கூட, மோடி அயோத்தியில் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு செல்லவில்லை. 2019 மே மாதம் அயோத்தியில் அந்த இடத்திற்கு மிக அருகில் பிரச்சாரம் செய்தும் கூட, மோடி அந்த பகுதியை தவிர்த்தே வந்தார்.

    கொள்கையை மாற்றினார்

    கொள்கையை மாற்றினார்

    ஏன் அந்த பிரச்சாரத்தில் எல்லாம், மோடி ராமர் கோவில் என்ற வார்த்தையை கூட பயன்படுத்தவில்லை. தன்னை வளர்ச்சியின் நாயகனாக மட்டுமே வெளிக்காட்ட மோடி நினைத்தார். இன்னொரு பக்கம் குஜராத் சம்பவத்தை மோடி தனக்கு சாதகமாக மாற்றி, இந்துத்துவாவின் ஒரே தலைவர் நான்தான் என்று மாற்றினார். அத்வானியிடம் இருந்த ''இந்து ரட்சகர்'' என்ற பிம்பத்தை மோடி தட்டிப்பறித்தார். அத்தனை வருடம் தனக்கு இல்லாமல் இருந்த பிம்பத்தை மோடி கட்டி எழுப்பினார். இந்துத்துவா - வளர்ச்சி என்ற இரட்டை பிம்பத்தை உருவாக்கினார். இதற்கு விதை போடப்பட்ட இடம்தான் அயோத்தி. எந்த குஜராத் முதல்வர் பாஜகவின் தோல்விக்கு காரணமாக இருந்தாரோ அதே குஜராத் முதல்வர்தான் பாஜகவின் எழுச்சிக்கும் காரணமாக இருப்பார் என்பதை மோடி, சத்தமே இல்லாமல் நிரூபித்தார்.

    உள்ளுக்குள் சொன்னார்

    உள்ளுக்குள் சொன்னார்

    மோடி தனது பிரச்சாரங்களில், பயணங்களில் அயோத்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போனதற்கு வேறு ஒரு காரணமும் சொல்கிறார்கள். 1991ல் ரத யாத்திரை முடியும் தருவாயில், மோடி அயோத்தி செல்வதாக இருந்தது. ஆனால் அன்று மோடியோ ''ராமர் கோவில் கட்டும் வரை அயோத்தி செல்ல மாட்டேன் '' என்று சபதம் செய்ததாக, அப்போதைய நிகழ்வை பதிவு செய்த பத்திரிக்கையாளர்கள், பாஜகவினர் சொல்வது உண்டு. அதேபோல் 30 வருடம் கழித்து மோடி தற்போது அயோத்தி செல்கிறார்.

    முதல்முறை எப்போது உச்சரித்தார்

    முதல்முறை எப்போது உச்சரித்தார்

    இத்தனை வருடம் அயோத்தி பிரச்சனையில் பெரிய அளவில் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காத மோடி, கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதிதான் வெளிப்படையாக ராமர் கோவில் குறித்து, அறிவிப்பை வெளியிட்டார். அவ்வப்போது ஆங்காங்கே ராமர் கோவில், குறித்து பேசிய மோடி, வெளிப்படையாக அன்றுதான் நாடாளுமன்றத்தில் ராமர் கோவில் குறித்து பேசினார். ராமர் கோவில் கட்டுவதற்கான டிரஸ்ட் ஒன்றை அமைக்க போவதாக மோடி வெளிப்படையாக அன்றுதான் அறிவித்தார். அதுவரை ராமர் கோவில் தொடர்பாக பெரிய அதிரடி அறிவிப்புகளை, கொண்டாட்டங்களை நிகழ்த்தாத மோடி.. அன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

    என்ன சொன்னார் தெரியுமா

    என்ன சொன்னார் தெரியுமா

    அன்று மோடி தனது உரையில், "என்னுடைய அரசு ராமர் கோவில் கட்டுவதற்கான டிரஸ்ட் ஒன்றை அமைக்க போகிறது. ராமர் கோவில் கட்டுவது தொடர்பான சுதந்திரமான முடிவுகளை எடுக்கும்'' என்று அவர் அறிவித்தார். அடுத்த சில மாதங்களில் ராமர் கோவில் கட்ட போவதை மனதில் வைத்துதான் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டார். லோக்சபாவில் தொடர்ந்து அமித் ஷா அதிரடி அறிவிப்புகளால் நாட்டை திரும்பி பார்க்க வைத்த போது, மோடி ராமர் கோவில் கட்டுவதற்கான ஹிண்டை கொடுத்து கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.

    5 மாதம் மோடி

    5 மாதம் மோடி

    மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டு, சரியாக 5 மாதம் கழித்து தற்போது ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. ராம் ரத யாத்திரையில் வெறும் மைக் பிடித்த இளைஞர் சரியாக 30 வருடம் கழித்து அதே ராமர் கோவிலுக்காக 40 கிலோ வெள்ளி கல்லை வைத்து இன்று அடிக்கல் நாட்டுகிறார். ராமர் கோவில் கட்டிவிட்டுதான் அயோத்தி செல்வேன் சென்று மோடி சொன்ன விஷயத்தை..சரியாக இத்தனை வருடம் கழித்து செய்து முடித்து இருக்கிறார்.

    அரசியல் பயணம்

    அரசியல் பயணம்

    அயோத்தி ரத யாத்திரையில் மைக் பிடித்தது, கோத்ரா சம்பவத்தில் அயோத்தி துறவிகள் - இஸ்லாமியர்கள் பலியானாது, சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் இருக்கும் அதே தொகுதியில் தேர்தலில் நின்று இமாலய வெற்றி பெற்றது என்று பிரதமர் மோடியின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணத்தோடு திட்டமிட்டோ, திட்டமிடாமலோ அயோத்தி பிரச்சனை தொடர்ந்தே வந்து இருக்கிறது. சரி தவறு என்ற கேள்விகள், கருத்துக்களுக்கு அப்பாற்பட்டு அயோத்தியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட போகும் ராமர் கோவில் அவரின் அரசியல் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைய போகிறது!

    English summary
    This article deals with how Modi's political life changed with the course of Ayodhya Issue and Ram Temple.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X