• search
லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

500 கிலோ கஞ்சாவை காணோம்.. எலி தின்னுடுச்சு.. உ.பி போலீஸ் தந்த "பரபர" அறிக்கை.. "ஷாக்" ஆன நீதிபதி

Google Oneindia Tamil News

லக்னோ: போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டுவிட்டதாக போலீஸார் கொடுத்த அறிக்கையை பார்த்து நீதிமன்றமே சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்து போன சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.

ஏதோ அரிசி, பருப்பை எலி சாப்பிட்டுவிட்டது என்பது போல கஞ்சாவை சாப்பிட்டுவிட்டது என காவல்துறை கூறிய பதிலை கேட்டு கடுப்பான நீதிபதி, "என்ன பாத்தா லூசு மாதிரி தெரியுதா" என்ற ரீதியில் போலீஸாருக்கு செம டோஸ் விட்டிருக்கிறார்.

மேலும், மாயமாகி போன கஞ்சாவை இன்னும் ஒரு வாரத்துக்குள் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவில்லை என்றால் நடப்பதே வேறு எனவும் போலீஸாரை திட்டி தீர்த்திருக்கிறார் நீதிபதி. இந்த சுவாரசிய சம்பவம் குறித்து இங்கு பார்ப்போம்.

சொத்தை அபகரிக்க பாஜக நிர்வாகி சோனாலி போகட்டுக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்து.. சிபிஐ பகீர் தகவல் சொத்தை அபகரிக்க பாஜக நிர்வாகி சோனாலி போகட்டுக்கு வலுக்கட்டாயமாக போதை மருந்து.. சிபிஐ பகீர் தகவல்

 700 கிலோ கஞ்சா பறிமுதல்..

700 கிலோ கஞ்சா பறிமுதல்..

உத்தரபிரதேசத்தில் உள்ள மதுரா நகரம் போதைப்பொருள் கடத்தலுக்கு பெயர்போன பகுதி ஆகும். பல போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் இங்கு செயல்பட்டு வருவதால் உத்தரபிரதேசம் முழுவதும் இங்கிருந்து கஞ்சா, அபின், கொக்கைன் போன்ற போதைப்பொருட்கள் சப்ளை ஆகி வருகின்றன. இதனிடையே, கடந்த 2018-ம் ஆண்டு அங்கு போதைப்பொருள் கடத்தலை தடுக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டன. இவ்வாறு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 700 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் பதிவு செய்யப்பட்டது.

"என்ன.. 200 கிலோ தான் இருக்கு"..

இந்தக் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பான விசாரணை மதுரா போதைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்ததால், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை சாட்சிக்காக நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு கடந்த வாரம் நீதிபதி உத்தரவிட்டார். இதன்பேரில், போலீஸாரும் அந்த கஞ்சா மூட்டைகளை நீதிமன்றத்துக்கு நேற்று கொண்டு வந்தனர். இதையடுத்து, அவற்றை எடைப்போட்ட போது வெறும் 200 கிலோ கஞ்சா மட்டுமே இருந்துள்ளது.

"எலி சாப்பிட்டுவிட்டது யுவர் ஆனர்"..

இதை பார்த்த நீதிபதி, "700 கிலோ கஞ்சா எனக் கூறினீர்கள். இப்போது என்ன வெறும் 200 கிலோ தான் இருக்கிறது.." என நீதிபதி கேள்வியெழுப்பினார். திடீரென நீதிபதி இப்படி கேட்டதால் என்ன சொல்வதென்று தெரியாமல் போலீஸார் திருதிருவென முழித்தனர். அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் சட்டென, "500 கிலோ கஞ்சாவை எலி தின்றுவிட்டது" என்று கூறினார். இதை கேட்ட நீதிபதியும், மற்றவர்களும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்தனர். "என்னது.. 500 கிலோ கஞ்சாவை எலி தின்றுவிட்டதா.." என நீதிபதி மறுபடியும் கேட்க.. "யெஸ் யுவர் ஆனர்.." என வடிவேலு ரேஞ்சுக்கு பம்மி இருக்கின்றனர் போலீஸார்.

சாராயம் குடித்த எலிகள்..

சாராயம் குடித்த எலிகள்..

இதை கேட்டு கடுப்பான நீதிபதி, "இந்தக் கதையை எல்லாம் வேறு எங்கேயாவது போய் சொல்லுங்கள். இன்னும் ஒரு வாரத்துக்குள் காணாமல் போன கஞ்சா மூட்டைகள் நீதிமன்றத்துக்கு வர வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு" எனக் கூறினார். இவ்வாறு காணாமல் போன பொருட்களுக்கு எலி மீது பழிபோடுவது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பு, பீகாரில் காவல்துறை சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயத்தை எலிகள் குடித்துவிட்டதாக போலீஸார் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்ககது.

English summary
A report submitted by Mathura police to a special Narcotic Drugs court claimed that rats ate over 500 kg of marijuana. Judge condemned police report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X