உன்னுடன் இருப்பேன்.. நீ கலக்கு.. பிரியங்காவிற்கு வத்ராவின் க்யூட் வாழ்த்து!
உத்தர பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் பிரியங்காவிற்கு அவரது கணவர் ராபர்ட் வத்ரா வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
லக்னோ: உத்தர பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் பிரியங்காவிற்கு அவரது கணவர் ராபர்ட் வத்ரா வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
உத்தர பிரதேச கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதை காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இதற்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். இதுகுறித்து ராபர்ட் வத்ரா பேஸ்புக்கில் போஸ்ட் செய்துள்ளார்.
ராபர்ட் வத்ரா வாழ்த்து
தற்போது பிரியங்காவிற்கு அவரது கணவர் ராபர்ட் வத்ரா வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அதில் ''வாழ்த்துகள்.. உங்கள் வாழ்க்கையின் அனைத்து தருணங்களிலும் உன்னுடன் இருப்பேன்.. '' என்று சந்தோசமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

காங்கிரசுக்கு பாதகம்
இந்த நிலையில் வத்ரா மீது இருக்கும் வழக்குகள் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு பாதகமாக முடிய வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி மீது சில வழக்குகள் இருக்கிறது. தற்போது பல வழக்குகளில் சிக்கி இருக்கும் ராபர்ட் வத்ராவால் காங்கிரஸ் நிறைய பிரச்சனைகளை தேர்தல் சமயத்தில் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.

சில வழக்குகள்
ஹரியானா ராஜஸ்தானின் நிலம் வாங்கிய விவகாரத்தில் அமலாக்க வாரியம் வத்ரா மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பாக பாஜக நிறைய வீடியோக்களை இதுவரை வெளியிட்டு இருக்கிறது. இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தத்தில் ராகுல் காந்தி, ராபர்ட் வத்ராவிற்காக பேரம் பேசினார் என்றும் கூட பாஜக குற்றஞ்சாட்டி இருக்கிறது.

தேர்தல் நேரம்
இத்தனை புகார்களுக்கு மத்தியில் பிரியங்காவின் அரசியல் வருகை பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இது தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தில் எதிரொலிக்கும். பாஜக இதை பற்று பிரச்சாரத்தின் போது பேசும் என்றும் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications