லோக்சபா தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டி.. கனோஜ் தொகுதியில் நாளை மனுத்தாக்கல்.. பின்னணியில் 2 காரணம்!
லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் தலைவராக உள்ள அகிலேஷ் யாதவ் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளார். அவர் உத்தர பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதியின் கோட்டையாக உள்ள கனோஜ் தொகுதியில் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார். தற்போது உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சி தலைவராக உள்ள அகிலேஷ் யாதவின் திடீரென லோக்சபா தேர்தலில் களமிறங்குவதன் பின்னணியில் 2 முக்கிய காரணம் உள்ளது.
இந்தியாவில் அதிக லோக்சபா தொகுதிகளை கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் உள்ளது. இங்கு மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. தற்போது உத்தர பிரதேசத்தில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார்.

உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சி தலைவராக சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் உள்ளார். இவர் கார்ஹால் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் அகிலேஷ் யாதவ் திடீரென்று போட்டியிட முடிவு செய்துள்ளார்.
அகிலேஷ் போட்டி: அதன்படி அவர் உத்தர பிரதேச மாநிலம் கனோஜ் தொகுதியில் களமிறங்க உள்ளார். இந்த தொகுதிக்கு 4வது கட்டமாக வரும் மே மாதம் 13ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் நாளை கனோஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ் வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
புதிய தொகுதி இல்லை: சமாஜ்வாதியின் கோட்டையான இந்த தொகுதிக்கு அகிலேஷ் யாதவுக்கு ஒன்றும் புதிது அல்ல. அதாவது கடந்த 1998, 1999, 2000, 2004, 2009, 2012, 2014 தேர்தல்களில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. இதில் 1999ல் அகிலேஷ் யாதவின் தந்தையான முலாயம் சிங் யாதவ் வெற்றி பெற்றார். அதன்பிறகு கடந்த 2000, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் அகிலேஷ் யாதவ் இந்த தொகுதியில் தான் போட்டியிட்டு எம்பியானார்.
‛மெயின்புரி’ தெரியுமா? ஒருமுறை கூட மலராத தாமரை.. பாஜகவை கலங்க வைக்கும் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ்!
எளிதாக வெல்ல வாய்ப்பு: அதன்பிறகு 2014ல் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2019 தேர்தலில் வெறும் 12,353 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் டிம்பிள் யாதவ் பாஜக வேட்பாளர் சுப்ராத் பதாக்கிடம் வீழ்ந்தார். இருப்பினும் கூட இந்த தொகுதி என்பது சமாஜ்வாதியின் கோட்டையாகவே கருதப்படுகிறது. மேலும் இந்த முறை அகிலேஷ் யாதவ் போட்டியிடும் பட்சத்தில் நிச்சயம் அவரால் எளிதாக வெற்றி பெற முடியும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் எந்த ஜாதி, மத மக்களிடம் அதிக தங்கம் இருக்கு தெரியுமா? டாப்பில் இவங்களா? முழு டேட்டா
2 காரணங்கள்: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது அகிலேஷ் யாதவ் போட்டியிடமாட்டார். அவர் உத்தர பிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவார் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் அகிலேஷ் யாதவ் திடீரென்று தனது முடிவை மாற்றி கனோஜ் தொகுதியில் போட்டியிடுகிறார். அகிலேஷ் யாதவின் இந்த முடிவின் பின்னணியில் 2 முக்கிய காரணங்கள் உள்ளன.
RCB or CSK.. பெங்களூரில் கேள்வியால் மடக்கிய நிருபர்.. தோனியை இழுத்து அண்ணாமலை கூறிய சுவாரசிய பதில்!
முதல் காரணம்: அதாவது ஒருவேளை வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களை கைப்பற்றலாம். அது நடக்கும் பட்சத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் அங்கம் வகிக்கும் ‛இந்தியா’ கூட்டணியின் கூட்டணி ஆட்சி அமையும். இந்த சமயத்தில் முக்கிய இலாக்காவை பெறலாம் என்பது முதல் காரணமாகும்.
2வது காரணம்: அதோடு ஒருவேளை ‛இந்தியா’ கூட்டணி தோற்றாலும் கூட எம்பியாக லோக்சபாவில் பாஜகவுக்கு எதிராக போராடும்போது அது அகிலேஷ் யாதவை இந்திய அளவில் பெரிய தலைவராக உயர்த்தும். இதன்மூலம் வரும் ஆண்டுகளில் தேசிய தலைவராக தன்னை முன்னிறுத்த முடியும். மாறாக உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவது என்பது அந்த மாநிலத்தில் மட்டுமே பெயரை பெற்று கொடுக்கும் என்பதால் தான் வரும் லோக்சபா தேர்தலில் அகிலேஷ் யாதவ் கனோஜ் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
களத்தில் கணவன்-மனைவி: ஏற்கனே இந்த லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி தொகுதியில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் சிட்டிங் எம்பியாக மீண்டும் சமாஜ்வாதி சார்பில் களமிறங்கி உள்ளார். இப்போது அகிலேஷ் யாதவும் கனோஜ் தொகுதியில் போட்டியிடுவதால் ஒரே தேர்தலில் கணவனும், மனைவியும் களம் காண்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications