Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛மெயின்புரி’ தெரியுமா? ஒருமுறை கூட மலராத தாமரை.. பாஜகவை கலங்க வைக்கும் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் மெயின்புரி லோக்சபா தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மீண்டும் போட்டியிடகிார். இதன்மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ள மெயின்புரி தொகுதியில் மீண்டும் டிம்பிள் யாதவ் வெல்வரா? தொகுதியின் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், 7 வது கட்ட தேர்தல் ஜுன் 1ம் தேதியும் நடக்கிறது. அதன்பிறகு ஜுன் 4ல் ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Lok Sabha Election 2024 BJP never win from Mainpuri now Again Akhilesh Yadav wife Dimple Yadav contest


இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்புரி லோக்சபா தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அந்த தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார்.

இது ரியல் பாஜக கோட்டை! ஸ்டார் அந்தஸ்தில் ‛‛பாட்னா சாஹிப்’’ தொகுதி.. ஒருமுறை கூட வெல்லாத காங்கிரஸ்!


சமாஜ்வாதியின் கோட்டை: உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் ஒன்று தான் மெயின்புரி. இந்த தொகுதிக்கு 3வது கட்டமாக மே மாதம் 7 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் இதுவரை 3 இடைத்தேர்தல்கள் உள்பட மொத்தம் 20 முறை லோக்சபா தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 10 முறை சமாஜ்வாதி கட்சி வென்றுள்ளது. காங்கிரஸ் 5 முறையும், ஜனதா கட்சி, 2 முறையும், ஜனகாங்கிரஸ் தா கட்சி (மதசார்பற்றது), பிரஜா சோசியலிஸ்ட் கட்சி ஜனதாதளம் ஆகியவை வென்றுள்ளன. தொடர்ந்த ன்று வருவதன் மூலம் இந்த மெயின்புரி தொகுதி என்பது சமாஜ்வாதியின் கோட்டையாகும்.

வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்க்கும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு.. யார் இந்த அஜய் ராய்? பின்னணி


முலாயம் சிங் யாதவ்: குறிப்பாக கடந்த 1996 முதல் 2019 வரை 10 தேர்தல்களில் (3 இடைத்தேர்தல்கள்) சமாஜ்வாதி கட்சி தான் வெற்றி பெற்றுள்ளது. இதில் 1996, 2004, 2009, 2014, 2019 ஆகிய தேர்தல்களில் மறைந்த சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் (அகிலேஷ் யாதவ் தந்தை) வெற்றி பெற்றார். கடந்த 2019ல் முலாயம் சிங் யாதவ் வெற்றி பெற்று எம்பியாக இருந்த நிலையில் 2022 அக்டோபரில் காலமானார். அதன்பிறகு 2022ல் நடந்த இடைத்தேர்தலில் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் வெற்றி பெற்றார்.

டிம்பிள் யாதவ் வெற்றி: கடந்த 2022 இடைத்தேர்தலில் டிம்பிள் யாதவ் 6.18 லட்சம் ஓட்டுகள் பெற்ற நிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 3.29 லட்சம் ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதனால் டிம்பிள் யாதவ் 2.88 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் மெயின்புரி தொகுதியின் சமாஜ்வாதி வேட்பாளராக மீண்டும் டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார். பாஜக இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. வேட்பாளர் தேர்வில் பாஜக மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

பாஜகவுக்கு கடினம்: இருப்பினும் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் டிம்பிள் யாதவை தோற்கடிப்பது என்பது மிகவும் கடினமான விஷயம் என கூறப்படுகிறது. ஏனென்றால் மெயின்புரி கடந்த 10 ஆண்டுகளாக சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக உள்ளது. வரும் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து களமிறங்குகிறது. இது டிம்பிள் யாதவுக்கு பிளஸ் பாயிண்டாக உள்ளது. அதோடு கடந்த 2014, 2019 தேர்தல்களில் மோடி அலை வீசியபோதும் கூட இந்ததொகுதியில் பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை. இது பாஜகவுக்கு மைனஸாக பார்க்கப்படுகிறது.

அகிலேஷ் தொகுதி: மேலும் மெயின்புரி லோக்சபா தொகுதியில் மொத்தம் 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் மெயின்புரி, போன்கான் ஆகியவற்றில் மட்டும் பாஜக எம்எல்ஏக்கள் உள்ளன. மாறாக கிஷ்னி, கார்கள், ஜஸ்வந்த் நகர் உள்ளிட்ட சட்டசபை தொகுதிகள் சமாஜ்வாதி கட்சியிடம் உள்ளது. இதில் கார்கால் தொகுதியின் எம்எல்ஏவாக தான் டிம்பிள் யாதவின் கணவரும், சமாஜ்வாதியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் உள்ளார். அதேபோல் ஜஸ்வந்த் நகர் தொகுதி எம்எல்ஏவாக அகிலேஷ் யாதவின் சித்தப்பா சிவ்பால்சிங் யாதவ் (முலாயம் சிங்கின் தம்பி) உள்ளார்.

பாஜக குழப்பம்: தற்போது வரை இந்த தொகுதியில் பாஜக ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. இருப்பினும் இந்த முறை மெயின்புரி தொகுதியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என பாஜக உறுதியாக உள்ளது. ஆனால் வேட்பாளர் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை. உத்தர பிரதேசத்தில் இன்னும் 12 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர் அறிவிக்காத நிலையில் அதில் ஒன்றாக மெயின்புரி உள்ளது. இதனால் தான் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் கூட வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது பற்றி பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் கூட இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ரிசல்ட் எப்படி இருக்கும்: பாஜக இன்னும் வேட்பாளர் அறிவிக்காவிட்டாலும் கூட மெயின்புரி தொகுதியில் வெல்ல வேண்டும் என களப்பணியை தொடங்கி உள்ளன. இது ஒருபுறம் இருக்க சமாஜ்வாதிக்கு தொகுதியில் இருக்கும் பலத்தை தாண்டி பாஜக வெல்வது என்பது மிகவும் கடினமானது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் சமாஜ்வாதியின் கோட்டையை தகர்க்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இதனால் வழக்கம்போல் மெயின்புரி தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வெல்கிறதா? இல்லாவிட்டால் சமாஜ்வாதியின் கோட்டையில் ஓட்டைப்போட்டு மெயின்புரியை பாஜக வசமாக்குகிறதா? என்பதை அறிய தேர்தல் ரிசல்ட் வெளியாகும் ஜுன் 4ம் தேதி வரை நாம் காத்திருக்க வேண்டிய அவசியமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+