Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது ரியல் பாஜக கோட்டை! ஸ்டார் அந்தஸ்தில் ‛‛பாட்னா சாஹிப்’’ தொகுதி.. ஒருமுறை கூட வெல்லாத காங்கிரஸ்!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் ஒரு முறை கூட காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் வெல்ல முடியாமல் பாஜகவே தொடர்ந்து ஜெயித்து வரும் ‛தாமரை’ சின்னத்தின் ரியல் எஃகு கோட்டையாக உள்ள பாட்னா சாஹிப் தொகுதி பற்றி உங்களுக்கு தெரியுமா?. ஸ்டார் அந்தஸ்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த தொகுதியின் பாஜக எம்பியான முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மீண்டும் களமிறங்கி உள்ள நிலையில் வரலாற்றை காங்கிரஸ் மாற்றி எழுதுமா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவில் ஒரேயொரு 2008 வரை ஒரேயொரு லோக்சபா தொகுதி பாட்னா என்ற பெயரில் இருந்தது. அதன்பிறகு 2009 லோக்சபா தேர்தலின் போது 2 தொகுதிகளாக மாற்றப்பட்டது. அதன்படி பாடாலிபுத்திரா, இன்னொன்று பாட்னா சாஹிப் என அதற்கு பெயரிடப்பட்டது. இதில் நாம் இன்று பார்க்கும் நட்சத்திர தொகுதி பாட்னா சாஹிப்.

Is Ravi Shankar Prasad will win again in BJP stronghold Patna Sahib Lok Sabha Constituency in Bihar

இந்த பாட்னா சாஹிப் லோக்சபா தொகுதியில் பக்திர்பூர், திகா, பாங்கிபூர், கும்ரார், பாட்னா சாஹிப், பாதுகா ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பாதுகா மற்றும் பக்திர்பூர் சட்டசபை தொகுதிகளில் மட்டும் தேஜஸ்வி யாதவின் (லாலு பிரசாத் மகன்) ஆர்ஜேடி கட்சி எம்எல்ஏக்கள் உள்ளன. மீதமுள்ள 4 தொகுதிகளிலும் பாஜகவினர் தான் எம்எல்ஏக்களாக உள்ளனர்.

பாட்னா சாஹிப் தொகுதி வாக்காளர்களை பொறுத்தவரை 72 சதவீதம் பேர் நகர்புறங்களில் வசிக்கின்றனர். 28 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். இங்கு பெரும்பான்மையாக இந்துக்கள் உள்ளனர். மொத்த வாக்காளர்களில் 90 சதவீதம் பேர் இந்துக்களாக உள்ளனர். சீக்கியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உள்ள நிலையில் சிறுபான்மையினர் 5 சதவீதம் பேர் வசிக்கின்றனர்.

‛‛ராமநாதபுரம் வேண்டாம்’’.. மீண்டும் வாரணாசியில் பிரதமர் மோடி போட்டியிடுவது ஏன்? 3 முக்கிய காரணம்


2009 ல் தான் பாட்னா சாஹிப் லோக்சபா தொகுதி உருவாக்கப்பட்டதால் இதுவரை மொத்தம் 3 தேர்தல்களை சந்தித்துள்ளது. இந்த 3 தேர்தல்களிலும் பாஜக வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர். பாஜகவின்கோட்டையாக உள்ள பாட்னா சாஹிப் தொகுதி இப்போது 4வது தேர்தலை சந்திக்க உள்ளது. அதாவது கடந்த 2009, 2014 லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு நடிகர் சத்ருகன் சின்ஹா வெற்றி பெற்றார். அதன்பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சத்ருகன் சின்ஹாவும், பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தும் போட்டியிட்டனர். இதில் ஹாட்ரிக் வெற்றிக்கு காத்திருந்த சத்ருகன் சின்ஹா தோல்வியடைந்தார். அவர் மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 849 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். அவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் 6 லட்சத்து 7 ஆயிரத்து 506 ஓட்டுகள் பெற்று 2 லட்சத்து 84 ஆயிரத்து 657 ஓட்டுகள் வித்தியாசத்தி சத்ருகன் சின்ஹாவை வீழ்த்தினார்.

‛அத்வானியின் கோட்டை’.. பாஜக தோற்கவே தோற்காது.. காந்தி நகரில் அமித்ஷா களமிறங்குவது ஏன்? சுவாரசியம்


இந்நிலையில் தான் தற்போது லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பாட்னா சாஹிப் லோக்சபா தொகுதிக்கு கடைசியாக 7 வது கட்டமாக ஜுன் 1ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தொகுதியில் மீண்டும் பாஜக சார்பில் ரவிசங்கர் பிரசாத் போட்டியிட உள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பீகாரில் பாஜக மற்றும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஆர்ஜேடி மற்றும் சிராக் பஸ்வானில் லோக்ஜன்சக்தி (ராம் விலாஸ்), ஹி்துஸ்தான் அவாம் மோர்ச்சா, ஆர்எல்எம் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. மொத்தம் 40 தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 16 இடங்களிலும், நிதிஷ் குமார் கட்சி 16 தொகுதிகளிலும், சிராக் பஸ்வான் கட்சி 5 தொகுதிகளிலும், ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா கட்சி, ஆர்எல்எம் கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகின்ற. இது ரவிசங்கர் பிரசாத்துக்கு பாசிட்டிவ்வாக உள்ளது.

அதேபோல் ‛இந்தியா’ கூட்டணியை பொறுத்தமட்டில் பீகாரில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன. 40 தொகுதிகளில் ஆர்ஜேடி 26 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் 5 தொகதிகளிலும் போட்டியிட உள்ளனர். இதில் பாட்னா சாஹிப் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்ட்டுள்ளது. ஆனாலும் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. சத்ருகன் சின்ஹா தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளதால் காங்கிரஸ் புதிய வேட்பாளரை தேடி வருகிறது.

இருப்பினும் வரும் தேர்தலில் வேட்பாளராக யாரை வேட்பாளராக அறிவித்தாலும் கூட பாஜகவுக்கு உள்ள செல்வாக்கால் மீண்டும் ரவி சங்கர் பிரசாத்தே வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஸ்டார் அந்தஸ்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த தொகுதியின் பாஜக எம்பியான முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை வீழ்த்தி வரலாற்றை வரும் தேர்தலில் காங்கிரஸ் மாற்றி எழுதுமா? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+