தனியாக இருந்த மருமகள்.. நடந்த 'சிந்து சமவெளி' சம்பவம்.. மகனின் முடிவை கேட்டு மிரண்ட ஊர் மக்கள்
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் கர்ப்பிணியாக இருந்த மருமகளை பாலியல் பலாத்காரம் செய்த மாமனார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளது. இதனிடையே தன்னுடைய தந்தை பலாத்காரம் செய்துவிட்டதால் இனி தனக்கு அவர் மனைவி அல்ல என்றும், தன்னுடைய தாயாகிவிட்டார் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம், மாமனார் - மருமகள் உறவை களங்கப்படுத்தி உள்ளது. மருமகள் என்று பாராமல் மாமனார் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இத்தனைக்கும் அவர் அப்படி நடந்து கொள்ளும் போது மருமகள் கர்ப்பமாக இருந்திருக்கிறார். அப்படி இருந்து மோசமான காரியத்தை மாமனார் செய்திருப்பது உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் சிந்து சமவெளி என்று படம் வந்திருக்கும். கிட்டத்தட்ட அந்த கதையை போல், ஆனால் அந்த படத்தில் சந்தர்ப்ப சூழலால் தவறு செய்வது போல் தவறு நடப்பதாக காட்சிகள் இருக்கும். இதில் அங்கு அப்படி இல்லை. மருமகளுடன் தனியாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தவறு செய்திருக்கிறார் மாமனார்,
இந்நிலையில் தன் தந்தையால் பாதிக்கப்பட்ட மனைவியை தன்னுடன் சேர்த்துக் கொள்ள அவரது மகன் மறுத்துவிட்டார் தனது தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்ட தன் மனைவி, இனி தனக்கு அம்மா என்றும் கூறி அதிர வைத்துள்ளார்.
இதனிடையே தான் வாழ்வை சீரழித்த மாமனார் மீது மருமகள் போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், எனக்கு ஒரு வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. காதலித்தவரையே திருமணம் செய்த எனக்கு வீட்டில் அதிர்ச்சி காத்திருந்தது. திருமணம் ஆன நாள் முதலே என் மாமனார் என்னை தவறான எண்ணத்துடன் பார்த்தும் பழகியும் வந்தார் திருமணமான சில மாதங்களில் நான் கர்ப்பம் ஆனேன்.
ஆனால் என்னை அவ்வப்போது சீண்டி வந்தவர், என் கணவர் கடந்த ஜூலை 5ம் தேதி வெளியூர் சென்றார். அப்போது நான் வீட்டில் தனியாகத்தான் இருந்தேன். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மாமனார் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். நடந்த சம்பவத்தை யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மாமனார் மிரட்டினார். ஆரம்பத்தில் யாரிடமும் கூறாமல் பயந்தபடியே இருந்தேன். ஆனால் ஒரு நாள் தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை கூறினேன்
அப்போது என் கணவர், இனி நான் உனக்கு கணவன் இல்லை. இனிமேல் நீ எனக்கு அம்மா என கூறியதுடன், என்னை விட்டு பிரிந்து செல்லும்படி கூறி, வீட்டை விட்டு துரத்திவிட்டார். எனவே என் மாமனார் மற்றும் கணவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு புகாரில் அந்த இளம் பெண் கூறியிருந்தார். அந்த பெண்ணின் புகாரின் பேரில் போலீஸார் அப்பா, மகன் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications