விடமாட்டோம்.. சுட்டுக் கொல்லப்பட்ட உதவியாளரின் உடலை சுமந்த ஸ்மிரிதி இராணி.. உருக்கமான வீடியோ!
உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தனது ஆதரவாளரின் உடலை பாஜக எம்.பி ஸ்மிரிதி இராணி சுமந்து சென்றார்.
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தனது ஆதரவாளரின் உடலை பாஜக எம்.பி ஸ்மிரிதி இராணி சுமந்து சென்றார்.
நேற்று இரவு 11.30 மணிக்குஅமேதி தொகுதி பாஜக எம்.பி ஸ்மிரிதி இராணியின் உதவியாளர் சுரேந்திர சிங் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாருலியா கிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகே வைத்து இந்த கொலை நடந்துள்ளது.
சுரேந்திர சிங் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார். இவர் ஸ்மிரிதி இராணிக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் ராகுல் காந்திற்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை செய்து விமர்சனத்திற்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணை
இது தொடர்பாக விசாரிக்க அமேதி போலீசார் தனிப்படை அமைத்து இருக்கிறார்கள். 2 பேர் சேர்ந்து சுரேந்திர சிங்கை துப்பாக்கியால் சுட்டதாக முதற்கட்ட தகவல்கள் வந்துள்ளது.இந்த நிலையில் இவரின் இறுதிச் சடங்கில் அமேதி எம்.பி ஸ்மிரிதி இராணி கலந்து கொண்டார். சுரேந்திர சிங்கிங் குடும்பத்தாரிடம் ஆறுதலாக நீண்ட நேரம் ஸ்மிரிதி இராணி பேசினார்.

என்ன விசாரணை
அதன்பின் போலீசாரிடம் கொலை குறித்து விசாரித்தார்.அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், இந்த கொலை அரசியல் காழ்புணர்ச்சியால் நடந்து இருக்கிறது. இதற்கு பின் ஒரு குழு திட்டமிட்டு இயங்கி உள்ளது. அவர்களை சும்மா விடமாட்டோம். தனிப்படை அமைத்து போலீசை விசாரிக்க சொல்லி இருக்கிறோம்.

யார்
இது தொடர்பான விசாரணையை உடனே முடிக்க சொல்லி இருக்கிறேன். விரைவில் குற்றவாளிகள் எல்லோரும் பிடிபடுவார்கள் என்று கூறினார். அதன்பின் ஸ்மிரிதி இராணி இறுதி சடங்கில் சுரேந்தர் சிங்கின் உடலை தொட்டு வணங்கினார். அதன்பின் அவரின் உடலை சுமந்து சென்றார்.
|
மக்களுடன் மக்களாக
இடுகாட்டிற்கு பாதி தூரம் வரை அவரது உடலை ஸ்மிரிதி இராணி தூக்கிச் சென்றார். அதேபோல் முக்கிய இன்னும் சில பாஜக நிர்வாகிகளும் உடலை சுமந்து சென்றனர். இந்த உருக்கமான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications