"வயிற்றுக்குள் பாம்பு புகுந்துவிட்டது" ஆஸ்பத்திரிக்கு ஓடிய நபர்.. அப்புறம் நடந்தது தான் ட்விஸ்ட்!
லக்னோ: உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் மலம் கழிக்கும் போது உடலுக்குள் பாம்பு புகுந்து விட்டதாகவும் இதனால் வயிற்று வலி ஏற்பட்டு இருப்பதாகவும் கூறி குடும்பத்தினரை மட்டும் இன்றி மருத்துவமனை ஊழியர்களையும் அல்லோலப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் கடைசியில், பரிசோதனை செய்து பார்த்தால் வயிற்று பகுதியில் அவர் கூறியது போல எதுவுமே இல்லை.
பல்வேறு காரணங்களால் வயிற்று வலி ஏற்பட்டதாக பலரும் மருத்துவமனை செல்வார்கள். சில நேரங்களில் கையில் கிடத்தவற்றை எடுத்து சாப்பிடும் சில வினோத பழக்கம் கொண்டவர்கள் வயிறு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதுண்டு.
அப்போது ஸ்கேன் செய்யும் மருத்துவர்கள் வயிற்றுக்குள் சில நேரங்களில் கற்கள், இரும்பு பொருட்கள் உள்ளிட்டவை இருப்பதையும் அதை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுப்பது குறித்த செய்திகளும் அவ்வப்போது வெளிவரும்.

வயிற்றுக்குள் பாம்பு புகுந்துவிட்டது: ஆனால், உத்தர பிரதேசத்தில் முற்றிலும் வித்தியாசயமாக.. மலம் கழிக்கும் போது உடலுக்குள் பாம்பு புகுந்துவிட்டதாகவும் இதனால் வயிற்று வலி தாங்க முடியவில்லை என்றும் கூறி குடும்பத்தினருக்கு மட்டும் இன்றி அப்பகுதி மக்களையும் பரபரபாக்கி விட்டு இருக்கிறார் ஒரு போதை நபர். இந்த சம்பவம் குறித்த விவரத்தை விரிவாக பார்ப்போம். உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தை சேர்ந்தவர் மகேந்திரா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் திடீரென ஹர்டோய் மாவட்ட மருத்துவ கல்லூரிக்கு அலறியடித்துக் கொண்டு ஓடினார். பெரும் பதற்றத்துடனும் படபடப்புடனும் வந்ததால், மருத்துவமனை ஊழியர்களும் என்னமோ ஏதோ என பதறியபடி அவரிடம் என்ன ஆச்சு.. எனக்க்கேட்டனர். தனக்கு கடுமையான வயிற்று வலி இருப்பதாகவும் காலையில் மலம் கழிக்கும் போது அந்தரங்க பகுதி வழியாக உடலுக்குள் பாம்பு புகுந்துவிட்டதாகவும் மகேந்திரா கூறினார். இவர் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்களும் உடனடியாக அவரை உள்நோயாளியாக அனுமதித்து பரிசோதனையை தொடங்கினர். உடல் முழுவதும் பரிசோதனை செய்தனர். இதில் அவரை பாம்பு கடித்தற்கான எந்த ஒரு தடயமோ... உடலுக்கு உள்ளே வெளியில் உள்ள ஒரு பொருள் எதுவும் இருப்பதாகவோ தெரியவில்லை.
அசாதாரணமாக எதும் இல்லை: மருத்துவ ஊழியர்கள் இதை மகேந்திராவின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். ஆனாலும் விடாப்படியாய் இருந்த மகேந்திராவின் குடும்பத்தினர் அவரை வேறு ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதன்படி மற்றொரு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அங்கும் வினோதமாக எதுவும் மகேந்திராவின் வயிற்றுப்பகுதியில் கண்டறியப்படவில்லை. அதேவேளையில் மதுபோதையில் தான் மகேந்திரா இப்படி உளறியதை உணர்ந்த மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் இதுபற்றி எடுத்துக்கூறியுள்ளனர். இதன்பிறகு மறுநாள் காலையில் மகேந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மதுபோதையில் சிறிது நேரம் மருத்துவமனையை அல்லோலப்படுத்திய மகேந்திராவின் நடவடிக்கையால் மருத்துவர்கள் மட்டும் இன்றி அவரது குடும்பத்தினரும் நொந்து போகினர். மகேந்திராவை பரிசோதித்த மருத்துவர் கூறுகையில், "போதைப்பொருள் எடுத்துக்கொள்வதால் இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதை தனது குடும்பத்தினரிடம் அந்த நபர் எடுத்து சொல்லியிருக்கிறார். இதனால், அவரை குடும்பத்தினரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். மறுநாள் அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அசாதாரணமாக எதும் இல்லை. இதன்பிறகு அந்த நபர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications