அகிலேஷ் மாயாவதியிடம் மண்டியிடும் வரை மட்டுமே கூட்டணி நிலைக்கும்- சமாஜ்வாதி எம்எல்ஏ கடும் தாக்கு
லக்னோ: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியிடம் மண்டியிடும் வரை மட்டுமே கூட்டணி நிலைக்கும் என சமாஜ்வாதி கட்சியின் எம்எல்ஏ ஹரிம்யாதவ் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை துடைத்தெறிய வேண்டும் என கட்சிகள் கங்கணம் கட்டி கொண்டு தேர்தல் கூட்டணியை அமைத்து வருகிறார்கள். இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

அதன்படி உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் இரு கட்சிகளும் தலா 38 இடங்களில் போட்டியிடவுள்ளனர். சிறிய கட்சிகளுக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மேலும் ரே பரேலி, அமேதி தொகுதிகளில் வேட்பாளர்களை இரு கட்சிகளும் நிறுத்தவில்லை.
இதையடுத்து காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டை கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த கூட்டணி குறித்து ஹரிம் யாதவ் கூறுகையில் சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி பிரோசாபாத்தில் எடுபடாது. இந்த கூட்டணி இங்கு வெற்றி பெறாது.
மாயாவதி என்ன சொன்னாலும் அகிலேஷ் கேட்கிறார். எங்கள் தலைவர் மாயாவதி முன்னால் மண்டியிடும் வரை மட்டுமே இந்த கூட்டணி நிலைக்கும் என கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications