கும்பமேளா நிகழ்ச்சியிலிருந்து புறப்பட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி! வந்ததுக்கு அலர்ஜிதான் மிச்சம்
லக்னோ: மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ஆப்பிள் நிறுவனத்தின் இணை இயக்குநரின் மனைவி லாரன் பவல் ஜாப்ஸ் தற்போது இங்கிருந்து புறப்பட்டிருக்கிறார்.
மூன்று நாட்கள் பயணமாக கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் இந்தியா வந்திருந்தார். விழாவில் பங்கேற்ற அவர், பிரபல சாமியார் வைஸானந்த் கிரியிடம் தீட்சை பெற்றார். திரிவேணி சங்கமத்தில் நீராடிய அவருக்கு அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன்னர் அவர் இவ்வளவு கூட்ட நெரிசலில் இருந்ததில்லை என்றும், அதனால்தான் அலர்ஜி ஏற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் 3 நாட்கள் பயணத்தை முடிதத்துக்கொண்டு அவர் இன்று பூட்டான் புறப்பட்டு சென்றிருக்கிறார்.

144 ஆண்டுகளுக்கு ஓருமுறை மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்த ஆண்டு சுமார் 40 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அதேபோல, பக்தர்களின் வசதிக்கு ஏற்பட சுமார் 20 ஆயிரம் தொழிலாளர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அதேபோல 15,000 தூய்மை பணியாளர்களும் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
யார் இந்த வைஸானந்த் கிரி:
கடந்த 2011ம் ஆண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரிழந்தார். அவர் மறைவுக்கு பின்னர் மனைவி லாரன் பவல் ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொள்ள தொடங்கினார். அவருக்கு அந்த நேரத்தில் வழிகாட்டியாக செயல்பட்டவர்தான் வைஸானந்த் கிரி. அமெரிக்காவில் இந்து மதத்தையும், சமஸ்கிருதத்தையும் வளர்த்தெடுக்கும் பணியில் ஈடுபட்டுவரும் சில சாமியார்களில் இவரும் ஒருவர். தாமஸ் மெர்ரிட் நால்ஸ் என்பவருக்கு மகனாக பிறந்த இவர், தனது 14வது வயதில் ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ள தொடங்கினார்.
இவருக்கு ஆன்மீக நாட்டம் என்பது ஆதி சங்கராச்சாரியாரின் கொள்கையால் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆன்மீகத்தை பயின்று யோகக்கலை நிபுணராக மாறி பின்னர் கடந்த 2013ம் ஆண்டு பிரக்யராஜ் கும்பமேளாவில் நிரஞ்சனி அகாடாவில் இணைந்து அதன் தலைவர் சுவாமி கைலாசானந்தா முன்னிலையில் துறவறம் பூண்டார். இதன் பின்னர் மகரிஷி பட்டம் கிடைத்தது.
இது அமெரிக்காவில் ஆன்மீக பணியை மேற்கொள்ள இவருக்கு உந்து சக்தியை கொடுத்தது. அப்போது முதல் இப்போது வரை ஆன்மீகத்தையும், சமஸ்கிருதத்தையும் அவர் அமெரிக்காவில் பரப்பி வருகிறார். இவரது முக்கியமான சீடர்களில் ஒருவராக லாரன் பவல் ஜாப்ஸ் இருக்கிறார். வைஸானந்த் கிரியுடன் சேர்ந்து, கும்பமேளாவில் லாரன் பவல் பங்கேற்றபோது அவருக்கு அலர்ஜி பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications