மனசே உருகுது.. விங் கமாண்டர் பிருத்வி இறுதி சடங்கில்.. அப்பா தொப்பியை எடுத்து தலையில் வைத்த மகன்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் பயிற்சி மையம் அருகில் காட்டேரி எனும் அடர்ந்த காட்டு பகுதி அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த பயங்கர விபத்தில் விமானப்படை கேப்டன் வருண் சிங் மட்டும் படுகாயத்துடன் உயிர் தப்பினார். அவருக்கு ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

 விங் கமாண்டர் உயிரிழப்பு

விங் கமாண்டர் உயிரிழப்பு

ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கிய இந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களில் விங் கமாண்டர் பிருத்வி சிங் சவுகான் என்பவரும் ஒருவர். இவரது சொந்த ஊர் உத்தரப்பிரதேசம் ஆகும். பிருத்வி சிங் சவுகான் இறப்பு செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர் துடிதுடித்து போனார்கள். பிருத்வி சிங் சவுகானின் உடல் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ராவுக்கு கொண்டு செல்லப்பட்டது.

 இறுதிச் சடங்கு

இறுதிச் சடங்கு

ஆக்ராவில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைப்பெற்றது. தேசியக் கொடி போர்த்தப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் சவப்பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டு இருந்தது. அப்பகுதியில் உள்ள மக்கள் திரண்டு வந்து வீர திருமகனுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அப்போதுதான் அங்கு நடந்த ஒரு நிகழ்வு ஏற்கனவே சோகத்தில் இருந்தவர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.

 சல்யூட் அடித்த மகன்

சல்யூட் அடித்த மகன்

விங் கமாண்டர் பிருத்வி சிங் சவுகான் உடலுக்கு அவரது மனைவி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியபோது அவரது இரண்டு குழந்தைகளும் தந்தைக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது விங் கமாண்டரின் 7 வயது மகன் தனது தந்தையின் உடலுக்கு குழந்தைகளுக்கே உரித்தான பாணியில் சல்யூட் அடித்தான்.

 கண்கள் குளமாகியது

கண்கள் குளமாகியது

இதனை தொடர்ந்து ஏதுமறியா அந்த பாலகன் தந்தையின் உடலில் மேல் வைக்கப்பட்டு இருந்த அவர் பணியின்போது பயன்படுத்திய தொப்பியை தனது தலையில் வைத்தான். சிறுவனின் இந்த செயலை கண்டு அங்கு இருந்தவர்களின் கண்கள் மேலும் குளமாகியது. சிறு வயதில் தந்தையை இழந்து தவிக்கும் சிறுவனுக்கு எப்படி ஆறுதல் கூறுவது? என்று அங்கு இருந்தவர்கள் துடிதுடித்து போய் நின்றனர். சிறுவனின் இந்த செயல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+