மணமகனுக்கு “பளார்” விட்ட மணமகள்! கலவர காடான கல்யாண வீடு! என்ன கொடுமை சார் இது? அதிர்ச்சி வீடியோ..!
லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண விழாவின்போது நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் முன்னிலையில் மணமகனை மணமகள் கன்னத்தில் பளார் என அறை விட்ட சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
தற்போதைய இணைய உலகில் ஒவ்வொரு நாளும் பலவகையான நிகழ்ச்சிகளை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது செல்போன்கள்.
பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் தற்போது செல்போன்கள் தவழ்ந்து கொண்டிருக்கிறது என்பதனை மறக்க முடியாது.

அதிர்ச்சி வீடியோ
மனிதனுக்கு உயிர் துடிப்பு போல செல்போனுக்கு இணைய இணைப்பு மிக முக்கியம். அவ்வாறான இணைய உலகில் ஒவ்வொரு நாளும் பல விதமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அவற்றைக் காட்சிகளாக நம் கண்முன்னே இணைய உலகம் வழங்கி வருகிறது. அவ்வாறு உலா வரும் வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும், சிந்திக்க வைக்கும். அந்த வகையில் தற்போது வந்துள்ள வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் உள்ளது.

திருமண நிகழ்வு
அந்தக்கால திருமணங்கள் உறவினர்கள் முன்னிலையில் தலைகுனிந்தபடி மணமகள் வர மணமகன் கழுத்தில் தாலி கட்ட நடைபெறும். ஆனால் தற்போது ஹெலிகாப்டரில் மணமகள் வந்து இறங்குவது , துணை நடிகர்கள் புடைசூழ நடனமாடி வருவது, தண்ணீருக்கு அடியில் தாலி கட்டுவது என பல வித்தியாசமான முறையில் நடைபெற்று வருகின்றன. ப்ரீ வெட்டிங் ஷூட் எனப்படும் திருமணத்துக்கு முந்தைய போட்டோ எடுக்கும் கலாச்சாரமும் தற்போது பரவி வருகிறது. அவ்வாறான ஒரு திருமணத்தின் போது மணமகள் மணமகனின் கன்னத்தில் அறைந்த சம்பவம் தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

மணமகனுக்கு அறை
உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று இளம் பெண் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தில் கலந்துகொள்வதற்காக நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் அங்கு வந்து குவிந்திருந்தனர். அத்தனை பேர் முன்னிலையில் எதிர்பாராத விதமாக அதிர்ச்சியளிக்கும் வகையில் மணமகள் மணமகனின் கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டார். திருமண மேடையில் மணமகனும், மணமகளும் கைகளில் மாலைகளோடு நின்ற போது தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மணமகன் மணப்பெண்ணுக்கு மாலையை அணிவிக்கும் போது, ஒரு முறை அல்ல, இரண்டு முறை அறைந்துவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கிச் சென்றார்.

உறவினர்களுக்குள் அடிதடி
இதனால் மணமகன் உட்பட அங்கிருந்த உறவினர்கள் அனைவரும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்ற நிலையில் மணமகள் வேகமாக அங்கிருந்து வெளியேறினார். மணமகனை பிடிக்கவில்லையா அல்லது வேறு எதுவும் காரணமா என தெரியாத நிலையில் இது குறித்து தகவல் உள்ளூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வருவதற்குள்ளாகவே அங்கிருந்த உறவினர்களுக்குள் அடிதடியும் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications