நோ சான்ஸ்.. இனி உ.பியில் குடிநீர் தட்டுப்பாடு வராது.. 'அம்ரித்' திட்டம் மூலம் மாஸ் காட்டும் பாஜக அரசு
உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதியை உறுதி செய்ய யோகி ஆதித்யநாத் அரசு திட்டமிட்டுள்ளது
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் உட்கட்டமைப்பை விரிவுபடுத்தும் விதமாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு 'அம்ரித் 1.O' எனும் திட்டத்தை அறிவித்திருக்கிறது.
தேசிய அளவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதன்மையானதாக இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை. அதேபோல பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. வழக்கமாக மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் நடைபெறும் இந்த மாநாட்டை முதன் முதலாக லக்னோவில் நடத்தி காட்டியுள்ளார் யோகி ஆதித்யநாத்.

இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் மாநிலத்திற்கான பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக உட்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்டம் தோறும் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி உருவாக்கப்படும் என்றும், இரு கல்லூரியாகவும் மருத்துவமனையாகவும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்தான் உட்கட்டமைப்பு குறித்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த அறிவிப்பின்படி இனி லக்னோ புதிய நகரமாக கட்டமைக்கப்படும் என்று கூறியிருந்தார். அதாவது தேசிய தலைநகரான டெல்லி எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளதோ அதேபோல லக்னோவும் சிறப்பான வசதிகளுடன் மறு கட்டமைப்பு செய்யப்படும் என்று கூறியிருந்தார். இதில் பூங்காக்கள், மருத்துவமனைகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், தியேட்டர்கள், மால்கள் மற்றும் காவல்நிலையம் என அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதை போன்று லக்னோ நகரம் மறு கட்டமைப்பு செய்யப்படும் என்று கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது மற்றொரு அறிவிப்பை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார். அதன்படி இனி உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் கிடைப்பதும், கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படுவதும் உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதற்கு 'அமரித் 1.O' எனும் திட்டத்தை அறிவித்திருக்கிறார். தற்போது வரை மாநில தலைநகரான லக்னோவில் மட்டும் சுமார் 8.7 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 1 லட்சம் வீடுகள் பாக்கி இருக்கின்றன. மீதமுள்ள வீடுகளுக்கும் விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றும், இதேபால மாநிலம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு இந்த வசதிகள் விரிவாக்கப்படும் எனவும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உட்கட்டமைப்பு வசதிகளை பொறுத்த அளவில் இதுவரை 331 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் 262 திட்டங்கள் கடந்த 12ம் தேதியுடன் 100% முழுமையடைந்துள்ளன. இதில் 226 திட்டங்கள் பாதாள சாக்கடை திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொத்த திட்டங்களுக்கு ரூ.5816.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே திட்டங்கள் முழுவீச்சில் விரைவில் முடிக்கப்படும் என அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications