123 உயிர்களை பலி வாங்கிய ஹத்ராஸ் ஆன்மீக நிகழ்ச்சி! இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை!
லக்னோ: ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் அதிகமான பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த துயர சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆன நிலையில் தற்போது வரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
உ.பியின் பிரபல சாமியாராக வலம் வருபவர்தான் போலோ பாபா. இவர் நேற்று முன்தினம் ஹத்ராஸ் நகரில் ஆன்மீக சொற்பொழிவை நடத்த திட்டமிட்டிருந்தார். இது தொடர்பாக அறிவிப்பும் வெளியானது. இவரது உரையை கேட்க ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். ஆனால், இவ்வளவு பக்தர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. இப்படி இருக்கையில் நிகழ்ச்சி முடிந்து பக்தர்கள் வெளியேறியபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த நெரிசலில் சிக்கிய பலர் திடீரென மயங்கி விழுந்தனர். ஆனால், அவர்களை மீட்காத சக பக்தர்கள் அவர்கள் மீது ஏறி நிகழ்ச்சி நடந்த இடத்திலிருந்து வெளியே வந்தனர். இதனால் 30 பேர் வரை உயிரிழந்ததாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், நேரம் செல்ல செல்ல இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க தொடங்கியது. தற்போது வரை இந்த விபத்தில் 123 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரின் நிலை மோசமாக இருப்பதால் இந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தற்போது வரை உயிரிழந்தவர்களில் 118 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனை நடைபெற்று முடிந்திருக்கிறது. ஆனால் இன்னும் 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.
இந்த சம்பவத்தின் துயரம் ஒருபுறம் இருந்தாலும், காயங்களுடன் மீட்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று உ.பி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவமனைகளில் போதுமான ஆக்சிஜன் வசதி இல்லை என்றும், மருத்துவமனை வளாகத்தில் பக்தர்களின் உடல்கள் குப்பைகளை போல போடப்பட்டிருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை கிளப்பிய நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர், பிரமதர் மோடி உட்பட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார்.
இந்நிலையில் விபத்து நடந்து 2 நாட்கள் ஆன பின்னரும் கூட தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டுமல்லாது காவல்துறை பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில் நிகழ்ச்சி நடத்திய போலோ பாபாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு உ.பி துணை முதல்வர் பிரஜேஷ் பதக் பதிலளித்திருக்கிறார். "இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது. காரணமானவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
ஆன்மீக நிகழ்ச்சிக்கு 80,000 பேர் கூடுவார்கள் என்றுதான் காவல்துறையில் அனுமதி வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால் நிகழ்ச்சியன்று சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் கூடியுள்ளனர். இதுதான் இந்த விபத்துக்கு அடிப்படை காரணமாகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications