உலகம் முழுவதும் ஹிந்தியை வலுப்படுத்த வேண்டும்.. அப்போதுதான் ஜனநாயகம் வலுபெறும்.. அமித்ஷா

Subscribe to Oneindia Tamil

லக்னோ: ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டுமென்றால் உலகம் முழுவதும் ஹிந்தி மொழியை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் நடைபெற்ற அகில பாரதிய ராஜ்பாஷா சம்மேளனம் சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசுகையில் குஜராத்தியை விட ஹிந்தி மொழியை நான் நேசிக்கிறேன். நாடு முழுவதும் மற்ற பிராந்திய மொழிகளுக்கும் ஹிந்தி மொழிக்கும் முரண்பாடும் இல்லை.

சுதந்திர தினவிழாவையொட்டி நடந்த அம்ரித் மஹோத்சவத்தின் கீழ் நாம் தவறவிட்ட ஒரே இலக்கான தாய்மொழியை நினைவுகூர்ந்து அதை நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிக் கொள்ளுமாறு நாட்டு மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். ஹிந்தி மொழியை சுற்றி பல சர்ச்சைகளை உருவாக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அது தற்போது முடிவுக்கு வந்தது.

இந்தி மொழி

இந்தி மொழி

உலகம் முழுவதும் இந்தி மொழி குறித்து பெருமையாக பிரச்சாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது பாராட்டுகள். இந்தி மொழியை உலகம் முழுவதும் வலுப்படுத்தினால்தான் ஜனநாயகம் வெற்றியடையும் என்றார். அது போல் ஆசாம்காரில் நடந்த அடிக்கல் நாட்டு விழா ஒன்றில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அவர் கூறுகையில் சமாஜ்வாதி ஆட்சியின் கீழ் ஆசாம்கார் பயங்கவாதிகளின் புகலிடமாக இருந்தது அனைவரும் அறிவர். அதன் பின்னர் ஆசாம்கார் தேச விரோதிகளின் கூடாரமாகவும் ஆனது. இன்று இந்த பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது நிச்சயம் ஆசாம்காரின் மீதான களங்கத்தை போக்கும்.

ஜின்னா

ஜின்னா

எங்கள் ஆட்சியில் ஜன்தன் கணக்குகள், ஆதார் அட்டைகள், செல்போன்களை (JAM-Jandhan bank accounts, Aadhaar and Mobile) தருகிறோம். ஆனால் சமாஜ்வாதி கட்சியோ ஜின்னா, ஆசாம் கான், முக்தர் (Jinnah, Azam Khan and Mukhtar) ஆகியோரை கொடுக்கிறார்கள். உங்களுக்கு எந்த JAM வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். பாஜகவுடையதா இல்லை சமாஜ்வாதியுடையதா எது வேண்டும் சொல்லுங்கள்.

மகத்துவம்

மகத்துவம்

சட்டசபைத் தேர்தல் நெருங்குவதால் ஜின்னாவிடம் மகத்துவத்தை அகிலேஷ் யாதவ் கண்டறிகிறார். இங்கு இத்தனை சிறுபான்மையினர் இருக்கிறீர்கள் (கூட்டத்தை பார்த்து கேட்கிறார்), ஜின்னாவிடம் எந்த நல்லதாவது இருக்கிறதா என்பதை யாராவது சொல்லுங்கள்.

பொருளாதாரம்

பொருளாதாரம்

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரத்தை கொடுக்கும் மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மாபியாக்களை ஒழித்தது முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மிகப் பெரிய பணியாகும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உ.பி. சட்டசபை தேர்தலில் ஆசாம்காரில் பாஜக வெற்றி பெறவில்லை. 2014, 2017, 2019 ஆம் ஆண்டுகளில் ஆசாம்காரின் வளர்ச்சியை பிரித்து பார்த்து புரிந்து கொள்ளுங்கள். அது போதும் . இது மாற்றத்திற்கான நேரம். ஆசாம்காரில் அனைத்து தொகுதிகளிலும் பாஜகவை வெற்றியடைய செய்ய வேண்டும் என்றார் அமித்ஷா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+