இவங்களையும் ஹைதராபாத் சம்பவம் மாதிரி சுட்டுக் கொல்லணும்.. உன்னவ் பெண்ணின் தந்தை ஆவேசம்
Recommended Video
லக்னோ: ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை என்கவுன்ட்டர் செய்தது போல் இவர்களையும் என்கவுன்ட்டர் செய்ய வேண்டும் என உன்னவ் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ஆதங்கப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை சிவம், சுபம் திரிவேதி ஆகிய இருவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர்.
அவருக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்து வந்த நிலையில் அந்த பெண்ணின் புகாரின்பேரிலும் நீதிமன்ற உத்தரவின் பேரிலும் சிவம் கைது செய்யப்பட்டார். சுபம் தலைமறைவாகிவிட்டார். இந்தநிலையில் சிவம் ஜாமீனில் வெளியே வந்தார்.
|
கடுமையாக தாக்குதல்
அப்போது ரே பரேலியில் உள்ள நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக அந்த பெண் அதிகாலை 4 மணிக்கு ரயில் நிலையத்திற்கு சென்றிருந்தார். அப்போது ரயில் நிலையத்துக்கு வந்த சிவம், சுபம் உள்பட 5 பேர் அந்த பெண்ணை கடுமையாக தாக்கினர்.

மருத்துவமனையில் பலி
பின்னர் அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதில் பலத்த தீக்காயங்களுடன் அந்த பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்றிரவு உயிரிழந்தார்.

என்கவுன்ட்டர்
இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை கூறுகையில் நான் எனது மகளை இழந்துவிட்டேன். ஹைதராபாத்தில் பலாத்கார குற்றவாளிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது போல் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளும் என்கவுன்ட்டர் செய்யப்பட வேண்டும் என்றார்.

உத்தரவிட வேண்டும்
இதுகுறித்து அந்த பெண்ணின் சகோதரர் கூறுகையில் இந்த குற்றவாளிகள் வெளியே வரக் கூடாது. அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும். என் சகோதரி சென்ற இடத்திற்கு அந்த குற்றவாளிகள் எப்படி வந்தார்கள். இது எப்படி நடந்தது என்பது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications