உ.பி.யில் நாளை மறுநாள் 6-ம் கட்ட தேர்தல்- 5 அமைச்சர்களுக்கு அக்னி பரீட்சை
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப் பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. உ.பி. 6-ம் கட்ட தேர்தல் களம் 5 அமைச்சர்களுக்கு அக்னி பரீட்சையாக இருக்கும் என கூறப்படுகிறது.
403 இடங்களைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டசபைக்கு மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட வாக்குப் பதிவு நிறைவடைந்துள்ளது.

6-ம் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவு
உ.பி.யில் 6-ம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் மார்ச் 3-ந் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 57 தொகுதிகளில் 6-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் தனித்தொகுதிகள் எண்ணிக்கை 11. 6-ம் கட்ட தேர்தலில் 676 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதில் 5 பேர் அமைச்சர்கள். இவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக 6-ம் கட்ட வாக்குப் பதிவு இருக்கும். இத்தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது.

கள நிலவரம்
6-ம் கட்ட தேர்தலை எதிர்கொள்ளும் 57 தொகுதிகளில் 2017 சட்டசபை தேர்தலில் பாஜக 46 இடங்களில் வென்றது. இதில் 37 தொகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 6-ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 27% பேர் குற்ற வழக்குகளை எதிர்கொண்டிருப்பவர்கள். 38% வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்.

வேட்பாளர்களின் சொத்துகள்
இதில் சிஸ்வா தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் தமக்கு ரூ500 மட்டுமே கையிருப்பு உள்ளதாக கூறியுள்ளார். பெல்தாரா சாலை தொகுதி சுயேட்சை வேட்பாளர் சிமோன் பிரகாஷ் தமக்கு ரூ6,600 மதிப்பிலான சொத்து மட்டுமே இருக்கிறது என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

கிரிமினல் வழக்குகள்
சமாஜ்வாதி கட்சியின் 48 வேட்பாளர்களில் 40 பேர், பாஜகவின் 52 வேட்பாளர்களில் 23 பேர், காங்கிரஸ் கட்சியின் 56 வேட்பாளர்களில் 22 பேர், பகுஜன் சமாஜ் கட்சியின் 57 வேட்பாளர்களில் 22 பேர், ஆம் ஆத்மி கட்சியின் 51 வேட்பாளர்களில் 7 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications