என் பெயரில் போலி ஆபாச வீடியோ-அய்யா! சாமீ! காப்பாத்துங்க.. போலீசுக்கு அலறி ஓடிய உ.பி. பாஜக வேட்பாளர்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாராபங்கி லோக்சபா தொகுதி சிட்டிங் எம்பியும் பாஜகவின் வேட்பாளருமான உபேந்திர சிங் ராவத் தமது பெயரில் போலி ஆபாச வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பிவிடப்படுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாரபங்கி லோக்சபா தொகுதி சிட்டிங் எம்பியாக இருப்பவர் உபேந்திர சிங் ராவத். பாஜக அறிவித்த முதல் கட்டமான 195 வேட்பாளர்களில் உபேந்திர சிங் ராவத் பெயரும் இடம் பெற்றிருந்தது. பாராபங்கி தொகுதியில் மீண்டும் உபேந்திர சிங் ராவத் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் பாஜக வேட்பாளரான உபேந்திர சிங் ராவத் எம்.பி. தரப்பில் உ.பி. கோட்வாலி போலீசில் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அப்புகாரில், உபேந்திர சிங் ராவத் ஆபாச வீடியோவில் இருப்பதாக மர்ம நபர் ஒருவர் சமூக வலைதளங்களில் பொய்யானதும் போலியானதுமான வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இத வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. பாராபங்கி தொகுதியில் வேட்பாளராக மீண்டும் உபேந்திர சிங் ராவத் அறிவிக்கப்பட்டதை விரும்பாத சமூக விரோதிகள் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர். உபேந்திர சிங் ராவத் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் இந்த வீடியோ பரப்பிவிடப்படுகிறது; ஆகையால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய வீடியோவில் படுக்கையறையில் பெண் ஒருவருடன் ஆண் ஒருவர் அலங்கோலமாக காட்சி தருகிறார். அந்த ஆண், உபேந்திர சிங் ராவத் என்கிற பதிவுகளுடன் சமூக வலைதளங்களில் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இதற்கு எதிராகவே தற்போது உபேந்திர சிங் ராவத் தரப்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போஜ்புரி நடிகர் பவன் சிங், வங்கப் பெண்களை இழிவாக பேசியதால் சர்ச்சையில் சிக்கியவர். இதனாலேயே கடும் எதிர்ப்பை எதிர்கொண்டார். இதனையடுத்து மேற்கு வங்கம் அன்சோல் லோக்சபா தொகுதி வேட்பாளராக தாம் போட்டியிடவில்லை என அறிவித்தார் பவன் சிங். மணிப்ப்பூரில் பெண்கள் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதாடிய பன்சூரி ஸ்வராஜ் (சுஸ்மா ஸ்வராஜ் மகள்) புது டெல்லி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தற்போது 3-வதாக உ.பி. வேட்பாளர் உபேந்திர சிங் ராவத் பெயரில் ஆபாச வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications