கொடுமைய கேளுங்க.. முஸ்லிம்களை தொழுக விட்ட உபி அரசு பேருந்து நடத்துநர்! இன்று உயிரோடவே இல்லை
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அரசு பேருந்தில் முஸ்லிம்கள் தொழுவதற்கு அனுமதி வழங்கியதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நடத்துநர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து இருக்கிறார்.
அந்த 32 வயது இளைஞரின் பெயர் மோகித் யாதவ். மெயின்புரியை அடுத்த நாக்லா குசாலி பகுதியில் சாதாரண ஏழை குடும்ப பின்னணியில் இருந்து வந்த இவர் உபி அரசு பேருந்தில் நடத்துனராக பணிபுரிந்து வந்துள்ளார். உத்தரப்பிரதேச அரசு போக்குவரத்து கழகமான UPSRTC இல் ஒப்பந்த பணியாளராக 8 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த இவர் மாத சம்பளமாக ரூ.17,000 பெற்று வந்து இருக்கிறார்.

இந்த 17 ஆயிரம் ரூபாய்தான் யாதவ் குடும்பத்தின் வாழ்வாதாரம். மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இவர் செய்த ஒரு உதவியால் அந்த வேலையே பறிபோகும் என இவர் நினைத்துப் பார்த்து இருக்க மாட்டார். உத்தரப்பிரதேசம் என்றாலே மதக்கலவரம், கும்பல் படுகொலை என வன்முறை மாநிலமாக சித்தரிக்கப்பட்டு வந்த நிலையில், எல்லோரும் அப்படியில்லை என்று காட்டியவர் மோகித் யாதவ்.
அப்படி என்ன நடந்தது. 3 மாதம் பின்னோக்கி செல்வோம். ஜூன் மாதம் பரேலியில் இருந்து டெல்லி செல்லும் பேருந்தில் மோகித் யாதவ் நடத்துனராக பணியில் இருந்து இருக்கிறார். அப்போது அந்த பேருந்தில் 14 பயணிகள் மட்டுமே சென்று உள்ளார்கள். ராம்பூர் மாவட்டம் மிலக் பகுதியை பேருந்து கடந்தபோது அதில் பயணித்த 2 முஸ்லிம்கள் நடத்துனரிடம் தொழுவதற்கு அனுமதி கேட்டு உள்ளார்கள். மற்ற 3 பேர் அந்த இடத்தில் பேருந்து நிறுத்த சொல்லி கேட்டு உள்ளார்கள்.
இதுபற்றி மோகித் யாதவ் ஓட்டுநர் கேபி சிங்கிடம் கூறியுள்ளார். இருவரும் அங்கு பேருந்தை நிறுத்த அனுமதித்து உள்ளார்கள். 3 பயணிகள் கீழே இறங்கி சென்றுவிட்ட நிலையில், 2 முஸ்லிம் பயணிகள் 2 நிமிடங்கள் தொழுதுவிட்டு பேருந்தில் ஏறியுள்ளார்கள். இந்த நிலையில் முஸ்லிம்கள் தொழுவதற்காக அரசுப் பேருந்தை எப்படி நிறுத்துவது என சில பயணிகள் அரசு போக்குவரத்து அதிகாரிகளிடம் புகாரளித்தனர்.
இது தொடர்பாக வீடியோ அப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி நடத்துனர் மோகித் யாதவ் மற்றும் ஒட்டுநர் கேபி சிங்கின் செயலுக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், மற்றொரு தரப்பினர் இருவரையும் கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த இரண்டே நாட்களில் மோகித் யாதவும், கேபி சிங்கும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்கள்.
Mohit Yadav, a conductor in UP roadways who was suspended after he allegedly allowed two passengers to offer Namaz while halting a Delhi-bound bus, killed himself on the night of August 26 in Manipuri UP. He had narrated the entire incindent that took place on June 3. pic.twitter.com/rJh5NgfLq6
— Piyush Rai (@Benarasiyaa) August 29, 2023
எந்த விதமான முறையான விசாரணையும் மேற்கொள்ளப்படாமல் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மாத வருமானம் இன்றி மூன்ற மாதங்களாக அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பணம் கிடைக்காமல் தனது மனைவி ரிங்கியிடம் வசித்து வந்து உள்ளார்.
செல்போனை ரீச்சார்ஜ் செய்வதற்கு கூட தன்னிடம் பணம் இல்லை என நண்பர்களிடம் அவர் கூறியுள்ளார். எந்த தவறும் செய்யாமல் தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி முதல் மோகித் யாதவ் திடீரென காணாமல்போனார். அவரது மனைவியும் உறவினர்களும் தேடி அலைந்துள்ளனர்.
இந்த நிலையில் மெயின்புரியில் ஓடும் ரயிலின் மீது பாய்ந்து மோகித் யாதவ் தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. மறுநாள் காலை மோகித்தின் வீடு அருகே அவரது உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. கடுமையான மன உளைச்சலின் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவரது மனைவி கோரிக்கை விடுத்து உள்ளார்.
மோகித் யாதவுடன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடத்துனர் கேபி சிங் கூறுகையில், "பேருந்தில் இருந்த பயணிகள் சிலர் கழிவரை செல்ல வேண்டும் என்றும், சிலர் தொழுக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்கள். அதற்காகவே சில நிமிடங்கள் அங்கு பேருந்தை நிறுத்தினோம்." என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications