குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக எடுத்த முயற்சிகள் பலனளித்துள்ளன! முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் குழந்தை தொழிலாளர் முறை வெகுவாக ஒழிக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநிலத்தில் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்ததில்லை. ஆனால் யோகி இந்த சாதனையை முறியடித்து 6 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்திருக்கிறார். இதனை கொண்டாடும் விதமாக மாநில அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. இதில் முக்கியமான திட்டம்தான் 'பால் ஷ்ராமிக் வித்யா யோஜனா'. இது குழந்தை தொழிலாளர்களுக்கு கல்வி வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது.

தற்போது வரை உத்தரப் பிரதேசம் முழுவதும் 20 மாவட்டங்களில் இந்த திட்டம் அமலில் உள்ளது. இதன் மூலம் 2,000 குழந்தைகள் பலனடைந்துள்ளனர். 8 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் அதிக அளவில் தொழிலாளர்களாக ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்று தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையை மாற்ற மாநில அரசும் ஏராளமான முயற்சிகளை எடுத்தது. ஆனால் எதுவும் நினைத்த அளவுக்கு பலனளிக்கவில்லை என்பதால் அதிரடியாக 'பால் ஷ்ராமிக் வித்யா யோஜனா' திட்டத்தை யோகி ஆதித்யநாத் தொடங்கினார்.
இது அவர் கூறுகையில், "இந்த திட்டத்தின் மூலம் குழந்தை தொழிலாளர்களாக கண்டறியப்படும் சிறார்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்களது வங்கி கணக்கில் மாதம் ரூ.2,200 வரவு வைக்கப்படும். இந்த சிறார்கள் 8, 9 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சியடையும்போது அவர்களது அக்கவுண்ட்டில் கூடுதலாக ரூ.6,000ஐ அரசு டெபாசிட் செய்யும். இந்நிலையில் இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள 75 மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம் சுமார் 5,000 சிறார்கள் குழந்தை தொழிலாளர் எனும் நிலையிலிருந்து மீட்கப்படுவார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications