300 என்கவுண்டர்.. “சிங்கம்” சூர்யா மீசை! தமிழ்நாடு கேடர் ஐபிஎசுக்கு உபியில் யோகி தந்த டாஸ்க் -யாரது?
குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டியது நீதிமன்றங்கள் தானே தவிர போலீசின் துப்பாக்கி முனைகள் அல்ல.
லக்னோ: தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கி தற்போது உத்தரப்பிரதேச காவல்துறையில் பணிபுரிந்து வரும் அதிகாரி பிரசாந்த் குமார் என்பவருக்கு மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கொடும் குற்றவாளிகளை பிடிக்கும் சிறப்பு பணியை வழங்கி இருக்கிறார் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத். யார் இந்த பிரசாந்த் குமார்? விரிவாக காண்போம்.
ஒவ்வொரு ஆண்டும் யுபிஎஸ்சி தேர்வு முடித்து, நிர்வாகத்துறை, காவல்துறைக்கு என ஏராளமான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பணிகளுக்கு வருகிறார்கள். ஆனால், இவ்வாறு வருபவர்களில் வெகு சிலர்தான் மக்கள் மனதில் பதிகின்றனர்.
அப்படி ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் கதையைதான் இப்போது பார்க்கவிருக்கிறோம். காரணம் சினிமா பாணியிலான அவரது அதிரடி ஆக்ஷன் செயல்பாடுதான். ஆம், இதுவரை 300 என்கவுண்டர்களை இவர் செய்துள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

என்கவுண்டர் போலீஸ்
குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டியது நீதிமன்றங்கள் தானே தவிர போலீசின் துப்பாக்கி முனைகள் அல்ல. ஆனால், போலீஸ் சினிமாக்கள் மக்கள் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் தாக்கம் காரணமாக, நிஜ போலீஸ்களிடமும் மக்கள் அதை எதிர்பார்க்கின்றனர். அதுதான் இதுபோன்ற போலீசார்களை உருவாக்குகிறது.

யார் அந்த ஐபிஎஸ்?
சரி விசயத்துக்கு வருவோம். இப்படி 300க்கும் அதிகமான என்கவுண்டர்களை செய்துள்ள ஐபிஎஸ் அதிகாரியின் பெயர் பிரசாந்த் குமார். 1990 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர் பீகார் மாநிலம் சிவானை சேர்ந்தவர். எம்பிஏ, எம்.எஸ்சி மற்றும் எம்.பில் படிப்புகளை முடித்து இருக்கிறார். இவருக்கு தமிழ்நாட்டுக்கும் தொடர்பு உள்ளது. ஆம், இவர் ஒரு தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி.

தமிழ்நாடு தொடர்பு
தமிழ்நாட்டில் பணியை தொடங்கினாலும் 1994 ஆம் ஆண்டு அவர் உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தனது பணி காலத்தில் உத்தரப்பிரதேசத்தில் வெளிப்படையாக ஆயுதங்களை பயன்படுத்தி வந்த அதி பயங்கரமான குற்றவாளிகளான சஞ்சீவ் ஜீவா, கக்கா கேங், முகிம் கலா, சுஷில் மூஞ்சு, அனில் துஜானா, விக்கி தியாகி, சுந்தர் பதி மற்றும் சபீர் ஆகியோரை கட்டுப்படுத்தி இருக்கிறார்

சட்டம் ஒழுங்கு டிஜிபி
இதன் மூலம் உத்தரப்பிரதேச காவல்துறை மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் இவர் பிரபலமானார். இவரது மனைவி டிம்பிள் வெர்மா ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து வருகிறார். பிரசாந்த் குமார் உத்தரப்பிரதேச மாநில சட்டம் ஒழுங்கு ஏடிஜியாக இருந்து வருகிறார். மாநிலத்தின் அனைத்து காவல் ஆணையர்களிடம் இவரிடம்தான் அனைத்தையும் தெரிவிக்க வேண்டும்.

அரசு விருதுகள்
தனது துணிச்சலான செயல்பாட்டிற்காக 3 முறை மாநில அரசிடம் இருந்து போலீஸ் விருதை பெற்று இருக்கிறார் பிரசாந்த் குமா. கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் காலண்டரி விருதை இவர் பெற்று உள்ளார். வாலார் போலீஸ் விருதையும் இவர் குடியரசுத் தலைவரின் கைகளால் பெற்று இருக்கிறார்.

யோகியின் சிறப்பு டாஸ்க்
இந்த நிலையில்தான் இவரை மேற்கு உத்தரப்பிரதேசத்தில் இயங்கும் குற்றவாளிகளை கட்டுப்படுத்துவதற்காக ஏடிஜியாக்கியது அம்மாநில அரசு. குறிப்பாக ஆயுத விநியோகம் செய்யும் கும்பல்களை கட்டுப்படுத்துவதை இவர் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக மீரட் பகுதியில் இருக்கும் சமூக விரோதிகளை ஒவ்வொருவராக பிடிக்க சிறப்பு அதிகாரியாக இவரை யோகி ஆதித்யநாத் நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications