பாஜக அரசின் திட்டங்கள் மூலம் சாமானியர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேச அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் சாமானிய மக்களுக்கானதுதான் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். மேலும், இந்த திட்டங்கள் மூலம் சாமானியர்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் உ.பியின் 80 நாடாளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்புடன் பல்வேறு நலத்திட்டங்களை மாநில அரசு அறிவித்து வருகிறது.

இந்நிலையில், இன்று கோரக்நாத் கோவிலில் நடைபெற்ற ஜனதா தர்ஷன் நிகழ்ச்சியில் ஏழை எளிய தம்பதிகளுக்கு திருமணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் பேசிய அவர், "உத்தரப் பிரதேச அரசுக்கு அனைத்து மக்களும் சமம்தான். யாருக்கும் இங்கு ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. இப்படிதான் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்ட ரூ.6.90 லட்சம் கோடி மதிப்பிலா திட்டங்களும் இதன் அடிப்படையில்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளனர். அனைவருக்குமான வளர்ச்சி இருந்தால்தான் மாநிலத்தின் வளர்ச்சி சாத்தியமாகும். உத்தரப் பிரதேச அரசு சமீபத்திய பட்ஜெட்டில் கலாச்சாரம் பாதுகாப்பு, ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், உட்கட்டமைப்பு மற்றும் கல்வி மேம்பாடு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது.
அதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும். ஒட்டுமொத்த சுகாதாரத்திற்கு ரூ.12,650 கோடியும், புதியதாக அமைய உள்ள 14 மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ.2491 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல சாலை வசதிகளை மேம்படுத்தவும் பரவலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் 60,397 கி.மீ சாலைகள் பள்ளங்களற்ற சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது.
14,144 கி.மீ சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே 2022-2023 நிதியாண்டில் மொத்தம் 60,397 கி.மீ நீளம் கொண்ட சாலைகள் பள்ளமற்றதாக மாற்றப்படும். அதேபோல சர்வதேச அளவில் இந்தியாதான் பால் உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. இந்தியாவில் உத்தரப் பிரதேசம்தான் பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.
எனவே பால் சங்கங்களை வலுப்படுத்தி, புத்துயிர் அளிக்கும் திட்டத்துக்கு ரூ.86.95 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 'நந்த் பாபா' பால் திட்டத்தை செயல்படுத்த ரூ.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி தொடங்கி வேளாண் வரை அனைத்து தரப்பினரையும் கருத்தில் கொண்டுதான் பாஜக அரசு செயலாற்றி வருகிறது" என்று கூறியுள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications