"முறையற்ற" நடனம்! போலீஸ் நிலையத்திலேயே.. அதுவும் சுதந்திர தினத்தன்று ஆட்டம் போட்ட காவலர்கள்.. வீடியோ
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுதந்திர தின கொண்டாடத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
Recommended Video
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதை ஒட்டுமொத்த தேசமாக நேற்றைய தினம் மிகக் கோலாகலமாகக் கொண்டாடியது.
இந்த 76ஆவது சுதந்திர தினத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்கள் நினைவு கூரப்பட்டது. நாட்டில் பல்வேறு இடங்களிலும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

சுதந்திர தினம்
தலைநகர் டெல்லியில் தேசியக் கொடியை ஏற்றிப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டை அரிக்கும் கரையானாக ஊழல் தான் உள்ளது என்றும் இந்த ஊழலை ஒழிக்கவில்லை என்றால் நம்மால் முழு வேகத்தோடு முன்னேற முடியாது என்றார். மேலும், ஊழல் நமக்கு ஒரு பெரிய சவால் என்றால் நெபோடிசம் நமக்கு மற்றொரு பெரிய சவால் என்றும் சிபாரிசுகள் தான் நமது நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தீங்கு" என்று சாடியிருந்தார் என்றும் தெரிவித்தார்.

போலீசார்
அதேபோல நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், போலீஸ் நிலையங்களில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில், உத்தரப் பிரதேச காவல் நிலையத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்ட பின்னர், காவலர்களின் செயல் தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

நாகினி
உத்தரப்பிரதேச மாநிலம் பிலிபிட்டில் உள்ள புரான்பூர் காவல் நிலையத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது யூனிபார்மில் இருக்கும் இரு காவலர்கள் திடீரென நாகினி ஆட்டம் போட்டுள்ளனர். அவர்களைச் சுற்றி இருந்த காவலர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ
மொத்தம் 28 நொடிகள் ஓடும் இந்த வீடியோவில் போலீஸ் அதிகாரி ஒருவர் பாம்பாட்டி போல ஊதுகிறார். அதற்கு ஏற்படக் காவலர் ஒருவர் ஆடுகிறார். இதனைச் சுற்றியுள்ள பலரும் வீடியோ எடுத்தபடி கைதட்டி ரசிக்கின்றனர். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications