ஞானவாபி வழக்கு இன்று மீண்டும் விசாரணை.. நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வுக்கு வாய்ப்பு உள்ளதா?
லக்னோ: ஞானவாபி வழக்கில், நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண இந்து தரப்பு தயாராக இல்லை என்றும், தாங்கள் சமரசத்துக்கு தயாராக இல்லை என்றும் மசூதி தரப்பு வழக்கறிஞர் கூறினார். இந்நிலையில் மசூதி தரப்பு வழக்கறிஞர் அகால மரணம் அடைந்த காரணத்தால் வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி அருகே அமைந்து உள்ளது காசி விஸ்வநாதர் கோயில். இந்துக்களின் புனித தளமாக இந்த கோயில் அருகே முகலாய பேரரசர் அவுரங்கசீப் கட்டிய ஞானவாபி என்ற மசூதியும் அமைந்து இருக்கிறது. நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவற்றின் அருகே சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது.

இந்நிலையில் கோவில் தொடர்பாக ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரி 4 இந்து பெண்கள் சார்பில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் "ஆதி விஸ்வேஸ்வரரின் கோயில் மீது ஞானவாபி கட்டப்பட்டு உள்ளது. இதை உறுதி செய்ய ஞானவாபிமசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும்" என்று வாதிட்டார்கள்
இதனை மறுத்த ஞானவாபி மசூதி , "எந்தவொரு வழிபாட்டுத் தலத்தின் மீதும் மசூதி கட்டப்படவில்லை" என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்கள் கடந்த ஜூலை 14-ம் தேதி முடிவடைந்தன. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் ஆய்வு நடத்த அனுமதியளித்து ஜூலை 21-ம் தேதி மாவட்ட நீதிமன்றம் உத்தவிட்டது.
வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தொல்லியல் துறை கியான்வாபி மசூதியில் ஆய்வினைத் தொடங்கியது. ஆனால் தொல்லியல் துறை ஆய்வு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. ஆனால் வழக்கின் வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்றம் பின்னர் அனுமதி அளித்ததன் காரணமாக கடந்த ஆகஸ்ட் 4 தேதி தொல்லியல் துறை ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஞானவாபி வழக்கு தொடர்பாக பேசிய விஷ்வ வேதிக் சனாதன சங்கத்தின் சர்வதேச தலைவர் ஜிதேந்திர சிங் பிசன், 'நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணலாம் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் இந்து தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் விஷ்னு சங்கர் ஜெயின், செய்தியாளர்களிடம் பேசும் போது, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறும் போது, அனைத்து தரப்பும் ஒத்துக்கொள்ளாத வரையில், சமரசத்தை உருவாக்க முடியாது .ஞானவாபி வழக்கில் தனிநபரோ அல்லது கட்சியோ தீர்வு காண விரும்பினாலும், அது அவர்களால் முடியாது. எனவே, நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண முயல்வது சட்டப்பூர்வமாக சாத்தியமற்றது. இந்த விஷயத்தில் எப்படி தீர்வோ அல்லது சமரசமோ செய்து கொள்ள முடியும்? ஒரு இடத்தில் சமரசம் ஏற்பட வேண்டும் என்றால், சில உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டும். அதேபோல், மற்றொரு தரப்பில் சில உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டும். நாங்கள் ஒரு இன்ச் அளவிலான நிலத்தைக் கூட கொடுப்பதற்கு தயாராக இல்லை. எங்களுக்கு அனைத்து பகுதிகளும் வேண்டும். அவர்கள் ஒரு கோயிலை மசூதியாகப் பயன்படுத்தி உள்ளார்கள். கோயில் வளாகத்தை தவறாகப் பயன்படுத்தியதற்கு முஸ்லீம் தரப்பு மன்னிப்பு கோர வேண்டும். எனவே சமரசத்திற்கு வாய்ப்பே இல்லை என்று கூறினார்.

இந்நிலையில் ஞானவாபி வழக்கில், நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண இந்து தரப்பு தயாராக இல்லை என்றும், தாங்கள் சமரசத்துக்கு தயாராக இல்லை என்றும் மசூதி தரப்பு வழக்கறிஞரும் கூறினார்.
இது ஒருபுறம் எனில், ஞானவாபி-சிருங்கர் கவுரி வழக்கில் ஞானவாபி மசூரி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபய் நாத் யாதவ் அகால மரணமடைந்த நிலையில் வழக்கறிஞர்கள் குழு நேற்று மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையை தள்ளி வைக்கம்படி கால அவகாசம் கோரியது. அந்த கோரிக்கையை ஏற்று நீதிபதி இன்று (ஆகஸ்ட் 18) வழக்கு விசாரணை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
ஞானவாபி வழக்கில் வாதாடி வந்த வழக்கறிஞர் அபய் நாத் யாதவ் தன்னுடைய அறையில் மாரடைப்பு காரணமாக கடந்த ஜூலை 31ம் தேதி உயிரிழந்தார்.இதனால் அப்போதே 15 நாட்கள் அவகாசம் கோரப்பட்டது.இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications