விழாக்கோலம் பூண்ட கோரக்பூர்.. அமித்ஷா முன்னிலையில்.. வேட்புமனு தாக்கல் செய்தார் யோகி ஆதித்யநாத்!
லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
Recommended Video
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் விரைவில் நடைபெறவுள்ளன. இதற்கான வேலைகளை அனைத்து மாநில கட்சிகளும் துரிதமாக செயல்படுத்தி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்குமான சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் நான்கு முனை போட்டியை உருவாக்கியுள்ளன. ஆனால் கடந்த முறை ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி கட்சிக்கும் தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக-வுக்கும் தான் நேரடி போட்டி நிலவுகிறது. கருத்துக்கணிப்புகள் பாஜக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன.

யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். யோகி ஆதித்யநாத் முதலில் அயோத்தி தொகுதியில் தான் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ராமர் கோயில் கட்டுவதற்கு பாஜக எடுத்த முயற்சிகள் வெற்றி பெற்றதையடுத்து, யோகி அயோத்தியில் போட்டியிட்டால் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜக மேலிடம் அதற்கு அனுமதி தராததாலோ அல்லது வெற்றி வாய்ப்பு குறைவு என தெரிந்ததாலோ, யோகி அவரது சொந்த தொகுதியான கோரக்பூரில் போட்டியிடுகிறார்.

வேட்புமனு
இந்த நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் இன்று காலை 11. 40 மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்தபோது, மத்திய அமைச்சர் அமித்ஷா உடனிருந்தார். முதல்முறையாக யோகி ஆதித்யநாத் சட்டசபைத் தேர்தலை சந்திக்கிறார், இதனால் அவருக்கு ஆதரவாக யுவ வாஹினி அமைப்புகள் கோரக்பூரில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதற்குமுன் கோரக்பூர் தொகுதியில் அமித் ஷா, மற்றும் யோகி தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றினார்கள். பிரசார மேடையில் இருவரும் இணைந்து வெற்றிக்குறியை, காட்டினார்கள்.

பாஜக
உத்தரப்பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. மீண்டும் உத்தரப்பிரதேசத்தில் வெற்றிபெற்று ஆட்சியில் அமர பாஜக பிரசாரம் செய்து வருகிறது. கருத்துக்கணிப்புகளும் பாஜக தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன. அதேநேரம் சமாஜ்வாதி கட்சி பாஜக-வுக்கு சரியான போட்டியைக் கொடுத்துவருகிறது. வேறு எந்த கட்சியின் முதல்வர் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் யோகி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications