70 வருடமாக குடிக்க தண்ணி இல்லாம இருந்தாங்க.. பிரசாரத்தில் எதிர்கட்சிகளை சாடிய யோகி ஆதித்யநாத்
லக்னோ: கடந்த 70 ஆண்டுகளாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்த கட்சிகள் மக்களுக்கு குடிதண்ணீர் வசதிகூட ஏற்படுத்தாலம் இருந்தன என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் இரண்டு கட்ட தேர்தல் முடிவடைந்துள்ளது. மூன்றாவது கட்ட தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது.
தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் என உத்தரப்பிரதேச தேர்தல் களம் பாஜக நட்சத்திரங்களால் நிரம்பி வருகிறது.

யோகி ஆதித்யநாத்
இந்நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஜலான் மற்றும் ஜான்சியில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''கடந்த 70 ஆண்டுகளாக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்து வந்தன. இந்த அரசுகள் மக்களுக்கு அடிப்படை குடிநீர் வழங்காமல் வந்தன. இதனால் மக்கள் குடிநீருக்காகத் தவித்தனர். ஆனால் எங்களது இரட்டை இஞ்சின் பாஜக அரசு உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வழங்கும் வகையில் 'ஹர் கர் நல் யோஜனா' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

சமாஜ்வாதி
சமாஜ்வாதி கட்சி 2017ம் ஆண்டுக்கு முன், அனைவருக்குமான கட்சி என்று சொல்லி வந்தார்கல். ஆனால் அவர்கள் உத்தரப்பிரதேச வளங்களை முழுங்கினார்கள்.
தங்களை சமாஜ்வாதிகளாகக் கருதும் இவர்கள் தங்கள் குடும்பம் என்று நினைப்பவர்கள். குடும்ப சிந்தனை தான் இவர்களிடம் அதிகமாக இருக்கும். அவர்களால் பொதுநலன் பற்றி நினைக்கவே முடியாது. குண்டர்களில் கையில் உத்தரப்பிரதேசம் இருந்தது. இதற்கு சமாஜ்வாதி தான் காரணம். ஆனால் 2017க்குப் பிறகு குண்டர்கள் காணாமல் போனார்கள்.

தடுப்பூசி
சமாஜ்வாதி தலைவர்கள், கொரோனா தடுப்பூசியை 'மோடி தடுப்பூசி, பாஜக தடுப்பூசி' என்று குறிப்பிடுவார்கள். அவர்கள் அதை எடுக்க மாட்டார்கள் என்று கூறுகிறார்கள். 'மோடி தடுப்பூசியும் பாஜக தடுப்பூசியும்' உயிரைக் காப்பாற்றியுள்ளன என்பதை இன்று அவர்களுக்குச் சொல்ல வேண்டும், எனவே இந்த தடுப்பூசி பாஜகவுக்காக வாக்களிக்கும்.

இளைஞர்கள்
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 கோடி இளைஞர்களுக்கு டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி இலவச டிஜிட்டல் டேட்டாவும் வழங்குவோம். 'சப்கா சத் சப்கா விகாஸ்' தான் எங்களின் குறிக்கோள் என்பதால் அனைவருக்கும் ரேஷனுடன் எந்தவித பாரபட்சமும் இன்றி தடுப்பூசிகளை வழங்கினோம்'' என்று இன்றைய பிரசாரத்தில் பேசினார் யோகி ஆதித்யநாத்.












Click it and Unblock the Notifications