லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஆர்எஸ்எஸ், பாஜக ஒரு பாம்பு.. நான் அவர்களை அழிக்க வந்த கீரிப்பிள்ளை.." உபி முன்னாள் அமைச்சர் அட்டாக்

Google Oneindia Tamil News

லக்னோ: பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் பிப். 10ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பல்வேறு கட்சிகளும் களத்தில் இருந்தாலும் கூட பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

 உத்தரப் பிரதேசம்

உத்தரப் பிரதேசம்

எப்படியாவது உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்க வைத்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. இதற்காகப் பிரதமர் மோடியே கூட கடந்த சில வாரங்களில் பல முறை உ.பி சென்ற பல நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார். இருப்பினும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கு நடக்கும் சம்பவங்கள் பாஜக ஆதரவாக இல்லை. தேர்தல் அறிவிப்பு வெளியான சில நாட்களில் மட்டும் அங்கு 3 அமைச்சர்கள், 7 எம்எல்ஏக்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். அவர்கள் விரைவில் சமாஜ்வாடி கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 அமைச்சர்

அமைச்சர்

கடந்த செவ்வாய்க்கிழமை முதலில் பாஜகவில் இருந்து விலகியவர் யோகி ஆத்தியநாத் அரசில் அமைச்சராக இருந்த சுவாமி பிரசாத் மவுரியா தான். அவர் விலகியதும் தான் பல எம்.எல்.ஏக்கள் வரிசாயைக பாஜகவில் இருந்து விலகினர். சுவாமி பிரசாத் மவுரியா கடந்த 2017 தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு தான். பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருந்தார். இப்போது மீண்டும் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு அவர், பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சிக்குச் சென்றுள்ளார்.

 பாம்பு, கீரி

பாம்பு, கீரி

இந்நிலையில், சுவாமி பிரசாத் மவுரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜவை நேரடியாக விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். தனது ட்விட்டரில் பிரசாத் மவுரியா, "ஆர்எஸ்எஸ் நாகப்பாம்பு போன்றது, பாஜக பாம்பு போன்றது. சுவாமி பிரசாத் மவுரியா ஆன நான், இவர்களை உத்தரப் பிரதேசத்தில் இருந்து முழுவதுமாக அழிக்கும் வரை ஓயாத கீரி போன்றவன்" என்று பதிவிட்டுள்ளார். தலித்துகள், வேலையில்லா இளைஞர்கள், விவசாயிகள் நலனை பறிக்கும் வகையில் செயல்படுவதால் பாஜகவை அவர் பாம்புடன் ஒப்பிட்டு விமர்சித்துள்ளார்.

 ஏன் விலகினேன்

ஏன் விலகினேன்

முன்னதாக பாஜகவில் இருந்து விலகியது தொடர்பாக பிரசாத் மவுரியா கூறுகையில், நான் பாஜகவில் இணைந்த போது, அவர்கள் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியை அமைத்தனர். ஆனால் அவர்கள் (பாஜக) மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நான் வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் எனது எதிர்ப்பை பதிவு செய்தேன். ஆனால் என் குரலை அவர்கள் கேட்கவே இல்லை. இதனால் வேறு வழியின்றி நான் ராஜினாமா செய்துவிட்டேன். இப்போது பிரச்சினைகளைப் பேசி சரி செய்து கொள்ளலாம் எனச் சொல்கிறார்கள். ஆனால், பிரச்சினை இருந்த சமயங்களில் அவர்களுக்குப் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் இல்லை என்பதே உண்மை" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
UP ex minister Swami Prasad Maurya slams BJP govt. UP ex minister Swami Prasad Maurya attacks RSS.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X