மகளை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு.. நினைச்சாலே ஈரக்குலை நடுங்குதே.. இவரெல்லாம் ஒரு அப்பாவா? வீடியோ வேற
லக்னோ: இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி பலருக்கும் கதிகலங்க செய்து கொண்டிருக்கிறது.. இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளனர் என்றாலும், சம்பந்தப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தபடி உள்ளனர்.
சமீபகாலமாகவே பெண்களுக்கு பாதுகாப்பு என்பதே நம்முடைய நாட்டில் கேள்விக்குறியாகி விட்டது. அதிலும் சில கல்வி நிறுவனங்களிலேயே பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாதபோது, மிகப்பெரிய கலக்கத்தை பெற்றோர்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது.

பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புகள் அடியோடு குறைந்து கொண்டே வருவதும், பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்களும் பெருகிக்கொண்டே இருக்கின்றன.. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகிவருவதால், பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்றால், அவர்கள் வீடு திரும்பும்வரை பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலையும் இன்று வந்துவிட்டது.
வடமாநிலங்கள்: குறிப்பாக இந்த கொடுமை வடமாநிலங்களில் அதிகமாகவே உள்ளது.. எவ்வளவுதான் போலீசார்கள் விழிப்பாக இருந்தாலும், அங்கு நடந்துவரும் ஊர் பஞ்சாயத்துக்களை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. குடும்ப பிரச்சனைகளாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்தினரிடமே விவகாரம் செல்கிறது.. கிராம பஞ்சாயத்துக்களே தீர்ப்பை சொல்கின்றன. சில கொடூர தீர்ப்புகளுக்கு, அந்தந்த கிராம மக்கள் அப்படியே கட்டுப்படவும் நேரிடுகிறது.
இதோ இப்போது ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது.. இதைப்பார்த்து பலரும் பதறிப்போய் விட்டார்கள்.. உத்தரபிரதேசம் லலித்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தாம்னா என்ற பகுதியில் வசித்து வருகிறார் கோவிந்த் தாஸ் ராய்க்வார்.. இவருக்கு 45 வயதாகிறது.. திருமணமான இவருக்கு, மனைவி, மகள் இருக்கிறார்கள். இந்த மகளுக்கு 10 வயதாகிறது.
சொல்பேச்சு கேக்கல: 10 வயது குழந்தை என்பதால், விளையாட்டுத்தனமாக இருந்திருக்கிறாள்.. இதனால் சொல் பேச்சு கேட்காத தன்னுடைய மகளை மிக கொடுமையாக அடித்து தாக்கியிருக்கிறார் கோவிந்த் தாஸ். இதற்காக தன்னுடைய 10 வயது மகளின் கால்களில் கயிறை கட்டி, தலைகீழாக தொங்கவிட்டு அடித்துள்ளார்...
அந்தக்குழந்தை வலி தாங்க முடியாமல் கதறி அழுதிருக்கிறாள்.. அவளது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிச்சென்று பார்த்துள்ளனர்.. அப்போதுதான், இந்த கொடுமையை வீடியோவாகவும் எடுத்துள்ளனர்.. பெற்ற மகளை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடிப்பதை பார்க்க சகிக்க முடியாமல, அதே பகுதியை சேர்ந்த ஒருவர், வீட்டுக்குள் ஓடிச்சென்று தடுத்து நிறுத்தியிருக்கிறார்.. அத்துடன் சிறுமியையும் காப்பாற்றியிருக்கிறார்.
கயிறுகள்: இந்த வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி, பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது.. அந்த வீடியோவில், மகளை கயிறுகளால் கட்டி போட்டு, தலைகீழாகத் தொங்கிவிட்டு கண்மூடித்தனமாக அடித்து தாக்குகிறார் அப்பா.
அப்போது வலி தாங்க முடியாத மகள், "அப்பா, தயவுசெய்து என்னை விட்டுடுங்க" என்று அலறிக்கொண்டே கெஞ்சுகிறாள்.. ஆனாலும், அந்த கொடூர தந்தையோ, விடாமல் மகளை சரமாரி வெளுத்து வாங்குகிறார்.. "இங்கே நடக்கிறதை வெளியில் சொன்னால், உன்னை இப்படியே கொன்னுடுவேன்" என்று மிரட்டிக் கொண்டே மீண்டும் மகளை தாக்குகிறார். இதெல்லாம் அந்த வீடியோவில் அப்பட்டமாக பதிவாகியிருக்கிறது., .
இந்த சம்பவத்தை நேரில் காண சகிக்காமல் அந்த பகுதியை சேர்ந்தவர்களே, போலீஸுக்கு சென்று புகார் தந்துள்ளனர்.. போலீசாரும் இதுகுறித்து உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்..
அதிரடி கைது: இதுகுறித்து போலீஸ் அதிகாரி ராஜா தினேஷ் சிங் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "10 வயது சிறுமி தனக்கு கீழ்ப்படிந்து நடக்கவில்லை என்பதற்காக, கோவிந்த் ராய்க்வார், தன்னுடைய மகளை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.. இந்த சம்பவத்தை அந்த பகுதியிலுள்ளவர்கள் யாரோ வீடியோ எடுத்து வைரலாக்கி உள்ளனர்.. இப்போது, கோவிந்த் தாஸை கைது செய்துள்ளோம்.. விசாரணையும் அவரிடம் நடந்து வருகிறது" என்றார்.
இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்து வருவதுடன், வீடியோவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.. எனவே, சம்பந்தப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் இணையத்தில் வலுத்து வருகிறது.. கைதான நபரிடம் விசாரணை நடந்து வந்தாலும், அந்த குழந்தை இப்போது எப்படி இருக்கிறாள்? என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications