பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க புதிய திட்டம்.. அப்படியே மாறும் உ.பி! அசத்தும் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க சிறப்பு திட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தொடங்கியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

அந்த வகையில், பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க சிறப்பு திட்டத்தை அறிவித்திருக்கிறார். அதன்படி உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் சார்ந்த ஏழு தொழில்துறை கிளஸ்டர்கள் உருவாக்கப்பட இருக்கிறது. முதல் கிளஸ்டர் கிரேட்டர் நொய்டாவில் கவுதம்புத் நகரில் அமைக்கப்படுகிறது. சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில், முதல் யூனிட் தொடங்கப்படுகிறது. அதாவது பெண்கள் தொழில்களை தொடங்க விரும்பினால் அவர்கள் குறைந்த விலையில் நொய்டாவில் இடத்தை வாங்க முடியும்.
நொய்டா தவிர லக்னோ, கான்பூர், வாரணாசி, கோரக்பூர், பிரயாக்ராஜ் மற்றும் புந்தேல்கண்ட் ஆகிய பகுதிகளிலும் இது போன்று இடம் ஒதுக்கப்படும். இது பெண்கள் சுயமாக முன்னேற உதவும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் கூறியதாவது, "மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்புக்கு முதல்வர் யோகி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இதன் மூலம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பான மாநிலங்களின் பட்டியலில் உ.பி முன்னணியில் இருக்கிறது. இந்த சட்டங்கள் மேலும் திருத்தப்பட்டு பெண்கள் பாதுகாப்பு மேலும் உறுதி செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications