உ.பி. சட்டசபை தேர்தல்.. 1 கோடி மாணவர்களுக்கு அடித்த "ஜாக்பாட்.." யோகி அறிவிப்பை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. உ.பி.யில் பா.ஜ.கவுக்கு அடுத்தபடியாக உள்ள அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மீண்டும் ஆட்சியை பிடிக்க ஆயத்தமாக உள்ளது.

நாங்களும் இருக்கிறோம் என்று காங்கிரசும் ஒரு பக்கம் கோதாவில் இருக்கிறது. உ.பி தேர்தலைஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்து வரும் நிலையில் மேற்கண்ட இந்த 3 கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.

 இலவச ஸ்மார்ட்போன், டேப்லெட்

இலவச ஸ்மார்ட்போன், டேப்லெட்

என்னதான் மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டாலும், தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்படும் இலவச திட்டங்கள், சலுகைகள்தான் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் என்பதை பாஜக புரிந்து கொண்டுள்ளது. இதனை மனதில் வைத்து உ.பி.யில் இறுதியாண்டு படிக்கும் 1 கோடி கல்லூரி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன், டேப்லெட்களை வழங்க உ.பி அரசு முடிவு செய்துள்ளது.

வாஜ்பாயின் பிறந்தநாள்

வாஜ்பாயின் பிறந்தநாள்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25-ம் தேதி முதல் கட்டமாக ஒரு லட்சம் இறுதியாண்டு படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகள் வழங்கப்படும் என்று உ.பி அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 25-ம் தேதி முதற்கட்டமாக மாணவர்களுக்கு 60,000 ஸ்மார்ட்போன்கள் மற்றும் 40,000 டேப்லெட்டுகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்க உள்ளார்.

 மூத்த அதிகாரி சொல்வது என்ன?

மூத்த அதிகாரி சொல்வது என்ன?

முதற்கட்டமாக சுமார் ரூ.2,035 கோடிக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்கள் வாங்குவதற்கான ஆர்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஒன்றுக்கு ரூ.10,740 வீதம் 10.50 லட்சம் ஸ்மார்ட்போன்களுக்கும், ஒரு டேப்லெட் ஒன்றுக்கு ரூ.12,606 என்ற விகிதத்தில் 7.20 லட்சம் டேப்லெட்டுகளுக்கு ம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காங்கிரசின் அறிவிப்பு

காங்கிரசின் அறிவிப்பு

உ.பி.யில் பாஜக இப்படி சலுகைகளை அள்ளி தெளித்து உள்ளது என்றால் இதுபோன்ற சலுகைகளை 2 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் அறிவித்து விட்டது. உ.பி.யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்படும் என்றும் இளங்கலை மாணவர்களுக்கு மின்னணு ஸ்கூட்டி. வழங்கப்படும் என்றும் ஏற்கனவே காங்கிரஸ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+