சோனி வேணாம்..சோனுவின் “ஷாக்” முடிவு! +2 மார்க் காரணமா? உபி போலீசில் புது காரணம் சொன்ன பெண்ணின் தந்தை
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் இரு வீட்டாரும் பிசியாக ஈடுபட்டு வந்தனர்.
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணை நூதனமான காரணத்தை கூறி மணமகன் வேண்டாம் என்று தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி என்ன காரணத்தை அவர் கூறினார்? விரிவாக பார்ப்போம்.
பொதுவாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு மணமகன் அல்லது மணப்பெண்ணின் குணங்கள் பிடிக்காவிட்டாலோ, இரு குடும்பங்களுக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது வரதட்சனை போன்ற பிரச்சனைகளாலோ திருமணம் நிறுத்தப்படுவது வழக்கு.
ஆனால், உத்தரப்பிரதேசத்தின் கன்னவுஜ் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மணமகன் வித்தியாசமான காரணம் ஒன்றை கூறி மணப்பெண்ணை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். இதை கேட்டு இரு வீட்டார் மட்டுமின்றி அந்த ஊரே அதிர்ச்சியடைந்து உள்ளதாம்.

நிச்சயதார்த்தம் நிறைவு
உத்தரப்பிரதேச மாநிலம் கன்னவுஜ் மாவட்டம் பகன்வாலா கிராமத்தை சேர்ந்தவர் ராம் சங்கர். இவரது மகன் சோனு. இவருக்கும் திர்வா கோட்டாலி பகுதியை சேர்ந்த சோனி என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிலையில் திருமணத்துக்கான ஏற்பாடுகள் இரு வீட்டாரும் பிசியாக ஈடுபட்டு வந்தனர்.

என்ன காரணம்?
இந்த நிலையில்தான் மணமகன் சோனு திடீரென தனக்கு திருமணம் செய்ய நிச்சயக்கப்பட்டு இருந்த மணமகள் சோனியை வேண்டாம் என்று கூறி இரு வீட்டாரையும் அதிர்ச்சியடைய செய்து இருக்கிறார். அதற்கு அவர் கூறிய காரணத்தை கேட்டபோதுதான் இரு தரப்பினரை மட்டுமின்றி கிராம மக்களையும் அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.

12 ஆம் வகுப்பு மதிப்பு
ஆம், தனக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இருந்த மணமகள் சோனி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மிகவும் குறைவான மதிப்பெண் பெற்று இருப்பதால் அவரை திருமணம் செய்துகொள்ள தனக்கு விருப்பம் இல்லை என்று மணமகன் சோனி தெரிவித்து இருக்கிறார். அவரது காரணத்தை மணமகளின் தந்தை மற்றும் குடும்பத்தினர் ஏற்க மறுத்து உள்ளனர்.

வரதட்சனை புகார்
மணமகன் சோனுவின் குடும்பத்தினர், தங்களிடம் அதிகளவில் வரதட்சனை கேட்டதாகவும் அதை தங்களால் வழங்க முடியாத நிலையில் தற்போது புதிய காரணத்தை கூறி சோனு திருமணத்தை நிறுத்துவதாக தெரிவித்து இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து மணமகன் சோனு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மணமகளின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

போலீசில் புகார்
அவர் அளித்து இருக்கும் புகாரில், "எனது மகள் சோனிக்கு சோனு என்பவருடன் கடந்த 2022 டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி கோத் பராய் சடங்கு நிறைவடைந்தது. அந்த நிகழ்ச்சிக்காக நான் ரூ.60 ஆயிரத்தை செலவழித்தேன். அத்துடன் மாப்பிள்ளைக்கு ரூ.15,000 மதிப்புள்ள தங்க மோதிரத்தையும் வழங்கினேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications