ஃபுல் பாட்டில் விஸ்கி.. கூட இருந்தே செய்த சதி.. ஒரே மூச்சில் குடித்த நபர்.. கடைசியில் ஷாக்
பந்தயத்தை ஏற்றுக்கொள்வதாக கூறிய ஜெய் சிங், ஃபுல் பாட்டில் விஸ்கியை தண்ணீர் ஏதும் கலக்காமல் ராவாக அப்படியே குடித்துள்ளார்.
லக்னோ: நண்பர்களின் சதித்திட்டம் தெரியாமல் அவர்களின் பேச்சை கேட்டு ஃபுல் பாட்டில் விஸ்கியை தண்ணீர் ஏதும் கலக்காமல் குடித்த நபர் ஒருவர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
அவரிடம் இருந்த பணத்தை திருடுவதற்காக நண்பர்களே இதுபோன்ற சதிச்செயலில் ஈடுபட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நண்பர்கள் என்ற பெயரில் நம்முடன் பழகுபவர்கள் அனைவரையுமே நம்பி விடக்கூடாது என்பதற்கு, இந்த சம்பவமே சிறந்த உதாரணமாக மாறியுள்ளது.

ஆட்டோ ஓட்டுநர்
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் ஜெய் சிங் (35). பட்டதாரியான இவருக்கு படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவருக்கு நண்பர்கள் அதிகம் எனக் கூறப்படுகிறது. எனவே நண்பர்களுடன் சேர்ந்து, வாரம் ஒரு முறை மது அருந்துவதை ஜெய் சிங் வழக்கமாக வைத்திருந்தார். நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தும் பழக்கத்தை கைவிடுமாறு அவரது மனைவி பல முறை கூறியும் ஜெய் சிங் அதை கேட்கவில்லை.

பணத்தை திருட சதி
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல தனது நண்பர்கள் போலா மற்றும் கேசவ் ஆகியோருடன் சேர்ந்து மரு அருந்தியிருக்கிறார் ஜெய் சிங். அப்போது, தனது ஆட்டோவுக்கு லோன் கட்டுவதற்காக ரூ.60,000 வைத்திருப்பதாக ஜெய் சிங் கூறியுள்ளார். இதை கேட்ட போலாவும், கேசவும் இந்த பணத்தை அவரிடம் இருந்த பறிக்க சதித்திட்டம் தீட்டினர். அதன்படி, ஒரு ஃபுல் பாட்டில் விஸ்கியை அவர்கள் வாங்கி வந்தனர்.

முழு பாட்டில் விஸ்கி
இந்த ஃபுல் பாட்டிலையும் தண்ணீர் கலக்காமல் குடித்தால் அடுத்த 6 மாதங்களுக்கான மது செலவை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக ஜெய் சிங்கிடம் அவர்கள் பந்தயம் கட்டியுள்ளனர். இதையடுத்து, இந்த பந்தயத்தை ஏற்றுக்கொள்வதாக கூறிய ஜெய் சிங், ஃபுல் பாட்டில் விஸ்கியை தண்ணீர் ஏதும் கலக்காமல் ராவாக அப்படியே குடித்துள்ளார். ஆனால், குடித்த ஒருசில நிமிடங்களிலேயே அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு உடல் முழுவதும் வியர்த்துள்ளது.

உயிரிழந்த பரிதாபம்
அப்போது அவர், தனது நண்பர்களிடம் தான் எங்கு இருக்கிறேன் என்பதே மறந்துவிட்டதாகவும், உடனடியாக தன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த கேசவும், போலாவும் ஜெய் சிங்கை அப்படியே சாலையோரத்தில் படுக்க வைத்துவிட்டு அவரிடம் இருந்த ரூ.60 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர். மறுநாள் காலையில் ஜெய் சிங் சாலையோரத்தில் இறந்து கிடப்பதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.

கைது நடவடிக்கை
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை பார்த்த போது, கேசவும், போலாவும் அவரிடம் இருந்து பணத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது. பின்னர் போலீஸார் அவர்களை பிடித்து விசாரணை நடத்திய போது, ஜெய் சிங்கிடம் இருந்து பணத்தை திருடுவதற்காகவே இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து, போலீஸார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications