Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"இந்து" காலண்டரை பாலோ பண்ணுங்க! அமாவாசை நாளில் ஜாக்கிரதையா இருங்க.. உபி போலீசுக்கு சர்ச்சை உத்தரவு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: அமாவாசை நாளில் எச்சரிக்கையாக இருக்கும்படியும் இந்து காலண்டர் அடிப்படையில் ரோந்து பணிகளை மேற்கொள்ளுமாறும் உபி போலீஸ் டிஜிபி வெளியிட்டுள்ள சுற்றறிக்கை சலசலப்பை உருவாக்கியுள்ளது.

நாடு முழுக்க குற்றச் சம்பவங்களைக் குறைக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் ரோந்து பணிகள் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் குற்றங்களைக் குறைக்கப் பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

 UP police chief asks Police to be Alert On Amavasya and Follow Hindu Calendar

இதற்கிடையே உத்தரப்பிரதேச போலீஸ் தலைவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தான் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது இந்து காலண்டர் தேதிகளின்படி குற்றங்களை மேப் செய்து.. அதன் அடிப்படையில் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதான் இப்போது நெட்டிசன்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரவு: உத்தரப் பிரதேச மாநிலத்தின் டிஜிபியாக இப்போது இருப்பவர் விஜய் குமார். 1988 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான விஜய் குமார், கடந்த ஜூன் மாதம் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அவர் தான் இதுபோன்ற ஒரு உத்தரவை இப்போது உபி போலீசாருக்கு பிறப்பித்துள்ளார். மேலும், பவுர்ணமிக்கு ஒரு வாரத்திற்கு முன்பும், அமாவாசை மற்றும் அமாவாசை பிறகும் குற்றங்கள் அதிகம் நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, எப்போதெல்லாம் இருண்ட இரவுகள் இருக்கிறது என்பதை இந்து கலண்டர் அடிப்படையில் குறித்து அதற்கேற்ப ரோந்து பணிகளை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த குறிப்பிட்ட நாட்களில் இரவு நேரங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் விழிப்புணர்வை அதிகரிக்கவும் போலீசார் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவை குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் இடங்களை அடையாளம் காணவும், எந்த நாட்களில் எப்படி ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்யவும் பயன்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எங்குக் குற்றம் நடைபெறுகிறது என்பதை இந்து காலண்டர் அடிப்படையில் குறித்து அதற்கேற்ப ரோந்து பணிகளைத் திட்டமிடும் இந்த செயல்முறை மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அமாவாசை, பவுர்ணமி: மேலும், அமாவாசை, பவுர்ணமியைப் பொறுத்து போலீசார் எப்படிச் செயல்பட வேண்டும்.. எப்படி ரோந்து பணிகளைத் திட்டமிட வேண்டும் என்பதையும் அவர் விளக்கியுள்ளார். எந்த நாட்களில் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது என்பது மக்களுக்கும் தெரிய வேண்டும் என்றும் அப்போது தான் அதற்கேற்ப மக்கள் திட்டமிட்டுக் கொள்வார்கள் என்றும் அவர் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த சுற்றறிக்கையில் மேலும், "கிரிமினல்கள் இரவு நேரங்களில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள்.. கொலை, திருட்டு, வழிப்பறி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்ற சம்பவங்கள் இரவு நேரத்தில் தான் ஏற்படுகிறது. அதிலும் நிலவின் ஒளி குறைவாக இருக்கும் நாட்களில் இவை அதிகம் ஏற்படுகிறது. எனவே, அதற்கேற்ப நாம் ரோந்து பணிகளைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

சர்ச்சை ஏன்: இருண்ட இரவுகளில் தான் பொதுவாகவே கிரிமினல் நடவடிக்கைகள் அதிகம் நடக்கும் என்பது போலீசாருக்கு முன்பே தெரியும். இது காலம் காலமாகப் பின்பற்றப்படும் நடைமுறை தான். ஆனால், அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில் இந்து காலண்டரை அடிப்படையாக வைத்து ரோந்து பணிகளைத் திட்டமிடுங்கள் என்று மதத்தைக் குறிப்பிட்டு போலீசார் சுற்றறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+