வீட்டில் குழுவாக சேர்ந்து தொழுகை செய்தது குற்றமா? 26 இஸ்லாமியர்கள் மீது வழக்கு பதிந்த உ. காவல்துறை
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் அனுமதியின் நமாஸ் செய்ததற்காக 26 பேர் மீது உள்ளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு பெரிய அளவில் ஒன்று கூறி தொழுகை செய்வதற்காக காவல்நிலையத்தில் அனுமதி பெறாத நிலையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துல்ஹேபூர் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக செய்திகள் சமூக வலைத்தளத்தில் பரவியதையடுத்து காவல்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து மொரதாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீப் குமார் மீனா கூறுகையில், "சாஜ்லெட் பகுதியில் உள்ள துல்ஹேபூர் கிராமத்தில் உள்ள இரண்டு உள்ளூர் கிராமவாசிகளின் வீட்டில் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஏராளமான மக்கள் கூடி பிரார்த்தனை செய்தனர். இந்த வீடுகளின் அண்டை வீட்டில் உள்ளவர்கள் இவ்வாறு செய்ய வேண்டாம் என்று வலியுறுத்திய பின்னரும் அவர்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்று கூடியுள்ளனர்" என கூறியுள்ளார்.
இதனையடுத்து உள்ளூர்வாசி ஒருவரின் புகாரின் பெரில், அடையாளம் காணப்பட்ட 16 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர் என மொத்தமாக 26 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது, மத வழிபாடுகளில் ஈடுபடுவதாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் (ஐபிசி 505-2) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையடுத்து சில வலதுசாரி அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. இதன் தொடர்ச்சியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டு வழிபாடு நடத்தியதால் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது என்பது இம்மாநிலத்தில் இயல்பாக நடக்கும் சம்பவங்கள்தான். ஏற்கெனவே, லுலு வணிக வளாகத்தில் தொழுகை நடத்தியதற்காக காவல்துறை சிலரை கைது செய்திருக்கிறது. அதாவது, இந்த வணிக வளாகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் முஸ்லிம் குழு ஒன்று நமாஸ் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்ததும், முஸ்லிம்களுக்கு மட்டுமே லுலு மால் வேலைவாய்ப்பு கொடுத்ததாக எதிர்ப்பு கருத்துக்கள் எழுந்தன.
இதையடுத்து, லுலு நிர்வாகம் உடனடியாக போலீசில் புகார் தந்தது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, லுலு மாலில் அனுமன் சாலிசாவை பாடியது தொடர்பாக 2 பேர் கைது செய்தனர். ஆனால், மறுபடியும், ஜூலை 12ம் தேதி, இதே இடத்தில் முஸ்லிம்கள் சிலர் தொழுகை நடத்தினர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், தொழுகை நடத்திய 8 முஸ்லிம் ஆண்களில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது மது உணர்வுகளை சீர்குலைத்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தையடுத்து பொதுமக்கள் வந்து செல்லும் இடத்தில், இப்படி குறிப்பிட்ட மதத்தினர் வழிபாடு நடத்தியது தவறு என்றும், பொது இடத்தை மத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதால் மத நல்லிணக்கத்தை மீறுவதாகவும் சில இந்து அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்ட தொடங்கின. அத்துடன், கடந்த 15ஆம் தேதி, இந்து மதத்தைச் சேர்ந்த 3 பேர் போட்டி வழிபாடுகளையும் நடத்தினர். காவல்துறை இவர்களையும் கைது செய்தது. இந்த விவகாரங்கள் தொடர்கதையாவதை உணர்ந்த வணிக வளாக நிர்வாகம், வணிக வளாகத்திற்குள் மதம் சார்ந்த நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கு தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications