காஷ்மீர் போல பற்றி எரியும் உபி சம்பல்: மசூதியில் ஆய்வு- போலீஸ் மீது கல்வீச்சு- துப்பாக்கிச் சூடு!
லக்னோ: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசித் தாக்குவதும் பதிலுக்கு பாதுகாப்பு படை வீரர்கள் திருப்பித் தாக்குவதுமான காட்சிகளை சில ஆண்டுகளுக்கு முன்புவரை நாடு பார்த்திருந்தது... அதே போன்ற காட்சிகள் தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. உ.பி. சம்பல் பகுதியில் ஷாஜி ஜமா மசூதியை நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தன.
அயோத்தி பாபர் மசூதி போல வட இந்திய மாநிலங்களில் பல மசூதிகளை இந்துத்துவா அமைப்பினர் சர்ச்சைக்குரியதாக்கி வருகின்றனர். இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதுதான் உ.பி. சம்பல் ஷாஜி ஜமா மசூதி. இந்து கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டது; இது தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பல் ஷாஜி ஜமா மசூதியை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்தும் உத்தரவிட்டது.

இந்த நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் குழு ஒன்று சம்பல் ஷாஜி ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றது. அவர்களுக்கு பாதுகாப்பாக ஏராளமான போலீசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மசூதி பகுதியில் இன்று திரண்டு அரசு அதிகாரிகளின் ஆய்வுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் அரசு அதிகாரிகள் மீது கற்களை வீசித் தாக்கினர்; அரசு அதிகாரிகள் வந்த வாகனம் தீ வைத்தும் எரிக்கப்பட்டது. இதனால் சம்பல் ஷாஜி ஜமா மசூதி பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து போக அறிவுறுத்தல் விடுத்தனர். இதனை பொதுமக்கள் ஏற்க மறுத்ததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்; இதற்கு பதிலாக பொதுமக்கள் தரப்பில் இருந்து சரமாரியாக போலீசார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது; டயர்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு வீதிகளில் வீசி எறியப்பட்டன. இதனால் சம்பல்ச ஷாஜி ஜமா மசூதி பெரும் போர்க்களமாக உருமாறியது. அப்போது நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதன் பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது.

இதனையடுத்து அர்சு அதிகாரிகள் குழு மசூதிக்குள் சென்று நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆய்வு நடத்தியது. கடந்த 19-ந் தேதி இதேபோல மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது மசூதி நிர்வாகத்தினர் உடனிருந்தனர். ஆனால் இன்று பெரும் வன்முறை வெடித்தது. இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications