250 ரூபாய் பீஸ் சார்.. கட்டலன்னு ஆசிரியர் அடிச்சே கொன்னுட்டாரு! கதறி அழும் பள்ளி மாணவனின் உறவினர்கள்
லக்னோ: பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி 3 ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் அடித்து கொன்ற சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் சிர்சியா பகுதியில் பண்டிட் பிரம்மதட் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் அனுபம் பதக்.
இவர் அதே பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவனை கடுமையாக தாக்கி இருக்கிறார். இதனால் படுகாயம் அடைந்த மாணவன் கடந்த ஆகஸ்டு 8 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மாணவன் கொலை
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவர் கடந்த 17 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை தொடர்ந்து சிறுவனின் மாமா காவல்நிலையத்தில் புகாரளித்தார். ஆசிரியர் தாக்கி மாணவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து உத்தரப்பிரதேச காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தி இருக்கிறது.

வழக்குப்பதிவு
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்விந்த் கே மவுரியா தெரிவிக்கையில், "ஆசிரியர் அனுபம் பதல் தாக்கியதில் மாணவர் உயிரிழந்துவிட்டதாக அவரது மாமா புகாரளித்து இருக்கிறார். ஆசிரியர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது." என்றார்.

பள்ளி கட்டணம்
இதற்கிடையே பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறியே ஆசிரியர் மாணவனை அடித்துக் கொன்றுவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து மாணவனின் சகோதரர் ராஜேஷ் விஸ்வகர்மா தெரிவிக்கையில், "மாதம் ரூ.250 கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி வருகிறோம். இது தெரியாமல் ஆசிரியர் என் தம்பியை தாக்கி கொன்றுவிட்டார்." என்றார்.

போராட்டம்
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்து இருப்பதாவது, "என் தம்பியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. ரத்தக் கசிவும் ஏற்பட்டு உள்ளது. அந்த ஆசிரியர் என் தம்பியை கொன்றுவிட்டார்." என்றார். மாணவனின் மரணத்துக்கு நீதி கோரியும், அடித்துக் கொன்ற ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications