தோட்டத்தில் தொங்கிய பசுக்களின் சடலம்.. உ.பி கலவரம் முன்பே திட்டமிட்டு நடந்ததா?.. புதிய பின்னணி!
உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் நேற்று நடத்தப்பட்ட மனித தன்மையற்ற கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று அந்த கிராமத்தின் தாசில்தார் தெரிவித்து இருக்கிறார்.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் நேற்று நடத்தப்பட்ட மனித தன்மையற்ற கலவரம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று அந்த கிராமத்தின் தாசில்தார் தெரிவித்து இருக்கிறார்.
உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதிக்கு அருகே இருக்கும் மாஹா என்ற கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பசுக்காவலர்கள் நேற்று நடத்திய கலவரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் கொடூரமாக சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொடூர கொலை குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், இந்த கலவரமே இந்துத்துவா அமைப்புகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. புல்சந்தார் தாசில்தார் ராஜ்குமார் பாஸ்கார் இதுகுறித்து திடுக்கிடும் விவரங்களை அளித்துள்ளார்.

மரத்தில் தொங்கியது
பசுக்கள் கொல்லப்பட்டதுதான் இந்த கலவரத்திற்கு காரணம். ஆனால் இந்த பசுக்களை கொன்று, அதன் தோலை கரும்பு தோட்டத்தில் எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று போட்டு இருக்கிறார்கள். மாட்டுக்கறியை சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். வேண்டும் என்றே மக்களுக்கு இது தெரிய வேண்டும் என்று வெளியே தொங்கவிட்டு சென்று இருக்கிறார்கள்.

உடனே வந்து சேர்ந்தனர்
இந்த விஷயம் தெரிந்ததும் அந்த பகுதிக்கு நூற்றுக்கணக்கில் பசு பாதுகாவலர்கள் வந்து உள்ளனர். ஹிந்து யுவா வாஹினி, சிவசேனா, பஜ்ரங் தல் அமைப்பை சேர்ந்த 400க்கும் அதிகமான நபர்கள் அங்கு வந்து இருக்கிறார்கள். அந்த பசுக்களை எடுத்துக் கொன்று கலவரம் செய்ய தொடங்கி உள்ளனர்.

எப்படி நடந்தது
தாசில்தார் ராஜ்குமார் இதை குறித்துதான் சந்தேகம் எழுப்புகிறார். அந்த பசுக்காவலர்கள் எல்லோரும், ஏற்கனவே டிராக்டரில் தயாராகி இருந்தது போல வந்துள்ளனர். சரியாக புகார் வந்த 5 நிமிடத்தில் சம்பவ இடத்திற்கு வந்து உள்ளனர். அவர்கள் தயாராகி இருந்தால் மட்டுமே இத்தனை ஆட்களை அழைத்துக் கொண்டு வர முடியும். இதனால் இது திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கலவரமாக இருக்குமோ என்று சந்தேகம் வருவதாக தாசில்தார் தெரிவித்து இருக்கிறார்.

அதிர வைக்கும் கோணம்
அதேபோல் இந்த கலவரத்திற்கும் அதை தொடர்ந்து போலீஸ் சுட்டுக் கொலை செய்யப்பட்டத்திற்கும் பின் இன்னொரு கோணமும் இருப்பதாக தகவல்கள் வருகிறது. புல்சந்தார் பகுதிக்கு அருகில் நடந்த இஸ்லாமிய கூட்டம் ஒன்றில் நேற்று காலை 10 லட்சம் இஸ்லாமிய இளைஞர்கள் கலந்து கொண்டனர். ''இதெமா'' என்ற பெயரில் இவர்கள் மத சடங்கு ஒன்றை நடத்தி உள்ளனர். இதில் கலவரம் உருவாக்க வேண்டும், இது இந்து இஸ்லாமிய பிரச்சனையாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

யார் இவர்கள்
இந்த கலவரம் மற்றும் கொலை தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முதல் குற்றவாளியாக இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தல் அமைப்பை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது இல்லாமல் பாஜக, சிவசேனா, ஆர்எஸ்எஸ், இந்து யுவா வாஹினி அமைப்பை சேர்ந்த நபர்களும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications