யமுனை ஆற்றிலே ரத்த வாடை..சல்லடை போட்ட போலீசாருக்கு ஷாக்! இப்படியும் நடக்குமா? யாரிந்த அஞ்சலி?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் நிலம் வாங்குவதற்காக கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருக்கிறார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண்ணுக்கு மதுபானத்தை ஊற்றி கொடுத்து கொலை செய்ததோடு உடலை எரித்து யமுனை ஆற்றில் வீசப்பட்டது தெரிய வந்திருக்கிறது. கொலை தொடர்பாக ரியல் எஸ்டேட் உரிமையாளரை கைது செய்துள்ளனர் போலீசார்.

உத்திரபிரதேச மாநிலம் எடவா பகுதியை சேர்ந்த 28 வயதான அஞ்சலிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் அவரது கணவர் எதிர்பாராத விதமாக உயரிழந்து விட்டார்.

இளம் விதவையான அவர் தனது குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார். குழந்தைகளின் எதிர் காலம் கருதி வீடு கட்டுவதற்காக நிலம் வாங்க திட்டமிட்ட அவர் இதற்காக சுபேந்திர யாதவ் என்ற ரியல் எஸ்டேட் உரிமையாளரை அணுகியிருக்கிறார்.

lucknow crime police

அவரிடம் ஆறு லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் பணம் வாங்கி இரண்டு மாதங்கள் வரை ஆகியும் நிலத்தை பத்திரப் பதிவு செய்யாமல் சுபேந்திர யாதவ் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது. பலமுறை கேட்டும் பணம் கிடைக்கவில்லை, நிலமும் கிடைக்கவில்லை. இந்நிலையில் சுபேர்ந்திர யாதவால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஞ்சலி பணத்தை அவரிடம் திரும்ப கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமைடைந்த சுபேந்திர யாதவ், எனது வீட்டில் வந்து பணத்தை வாங்கிக் கொள் என கூற கடந்த ஏழாம் தேதி அங்கு சென்று இருக்கிறார்.

அப்போது அஞ்சலிக்கு சுபேந்திர யாதவ் வலுக்கட்டாயமாக மது ஊற்றி கொடுத்து தாக்கியுள்ளார். தொடர்ந்து அவரது நண்பர் கவுரவ் என்பவருடன் சேர்ந்து அஞ்சலியின் கழுத்தை துண்டு மூலம் நெரித்து கொலை செய்திருக்கிறார்கள். தொடர்ந்து அஞ்சலியின் உயரிழந்த உடலை தன்னுடைய தந்தை மற்றும் மனைவிக்கு வீடியோ கால் மூலம் காட்டியதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது உடலை கார் மூலம் யமுனை ஆற்றங்கரை எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்கள்.

அரைகுறையாக எரிந்த உடலை யமுனை ஆற்றில் வீசியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அஞ்சலியை காணாமல் அவரது சகோதரி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியுள்ளனர். அப்போது சுபேந்திர யாதவின் வீட்டருகே அஞ்சலியின் இரு சக்கர வாகனம் எரிந்த நிலையில் கிடப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து சுபேந்திர யாதவிற்கும் அஞ்சலிக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்ததையும் கூறியுள்ளனர். இதனையடுத்து அவரை கைது செய்து விசாரித்த போது அஞ்சலியை நண்பருடன் சேர்ந்து கொலை செய்து உடலை எரித்து யமுனை ஆற்றங்கரையில் வீசியதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படை உதவியுடன் போலீசார் யமுனை ஆற்றங்கரையில் சுபேந்திர யாதவ் அடையாளம் காட்டிய இடத்தில் உடலை தேடினர். சில மணி நேர தேர்தலுக்குப் பிறகு அஞ்சலியின் உடல் கிட்டியது. அது அஞ்சலியின் உடல் தான் என்பதை அவரது குடும்பத்தினரும் உறுதி செய்தனர். இதனையடுத்து சுபேந்திர யாதவ், கவுரவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அஞ்சலியின் கழுத்தை நெருக்க பயன்படுத்தப்பட்ட துண்டு, உடலை யமுனை ஆற்றுக்கு எடுத்துச் சென்ற கார், அஞ்சலியின் எரிந்து போன இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சுபேந்திர யாதவின் தந்தை மற்றும் மனைவிக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+