Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

21 வயது பெண்ணை சுட்டு கொன்ற சம்பவம்.. அடையாளத்தை மறைக்க கொலையாளி செய்த தில்லாலங்கடிகள்! பகீர் தகவல்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: திருமணம் செய்ய மறுத்த 21 வயது கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற இளைஞர் தனது பைக்கை அடையாளம் காணாமல் இருக்க அதன் நம்பர் பிளேட்டை ஒரு கால்வாயின் அடியில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி நேற்றைய தினம் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டனர்.

UP woman shot dead accused hide his motor cycle number plate under a culvert

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பெண் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு பலியாகிவிட்டார். அத்திக் அகமதுவை சுட்ட போது எப்படி வேடிக்கை பார்த்தனரோ அப்படியே ரோஷினியை சுட்ட போதும் பொதுமக்கள் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக சொல்லப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சம்பவம் நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில்தான் போலீஸ் நிலையம் இருக்கிறது. அந்த பெண்ணை இரு மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதும் அவர் வலியால் துடித்து சரிந்து விழுந்தார். உடனே அந்த இரு இளைஞர்களும் துப்பாக்கியை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். விசாரணையில் துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்ணின் பெயர் ரோஷினி என்பது தெரியவந்தது.

UP woman shot dead accused hide his motor cycle number plate under a culvert

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரோஷினிக்கு தெரிந்த நபர்கள்தான் இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருக்க முடியும் என அவருடைய குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். இதை இந்த வழக்கிற்கு துப்பாக வைத்த போலீஸார் 4 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக ராஜீ என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண்ணுடன் தான் காதலில் இருந்து வந்ததாக தெரிவித்தார். மேலும் தனக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தன்னை அந்த பெண் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த அந்த இளைஞர், ரோஷினியை சமாதானப்படுத்த அவருடன் பேச முயற்சித்தார். ஆனால் அந்த பெண்ணோ பேச மறுத்துள்ளார்.

UP woman shot dead accused hide his motor cycle number plate under a culvert

சம்பவத்தினத்தன்று கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு வந்த அந்த பெண்ணை வழிமறித்து ராஜீ பேச முயற்சித்தார். ஆனால் அந்த பெண் மீண்டும் பேச மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்ததால் தன்னிடம் இருந்த துப்பாக்கியை வைத்து அந்த பெண்ணை சுட்டுக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் தன்னை போலீஸார் அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை கழற்றி கால்வாயின் அடியில் வைத்தாராம். அது போல் அவருடைய துணிகளை மோப்ப நாய் மோப்பம் பிடித்து கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக பேத்வா ஆற்றில் அந்த உடைகளை ராஜீ நனைத்தாராம். இப்படி கஷ்டப்பட்டு தனது அடையாளங்களை மறைக்க முற்பட்டாலும் ராஜீ கைது செய்யப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+