21 வயது பெண்ணை சுட்டு கொன்ற விவகாரம்! இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியை எடுத்து போலீஸை சுட்ட உ.பி. இளைஞர்
லக்னோ: ஆற்றில் வீசிய ஆடைகள், கால்வாயில் மறைத்த நம்பர் பிளேட் ஆகியவற்றை அடையாளம் காட்ட அழைத்து செல்லப்பட்ட ராஜீ, திடீரென இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியை பறித்து அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் பரபரப்பு எழுந்தது.
உத்தரப்பிரதேசத்தில் ஜலான் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி திங்கள்கிழமை தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்த பெண் அதிக ரத்த இழப்பு ஏற்பட்டு பலியாகிவிட்டார். இந்த பெண்ணை இருவரும் சுட்ட போதே அங்கிருந்த பொதுமக்கள் யாரும் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்ததாக தெரிகிறது.
இந்த துப்பாக்கிச் சம்பவம் நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில்தான் போலீஸ் நிலையம் இருக்கிறது. அந்த பெண்ணை இரு மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டதும் அவர் வலியால் துடித்து சரிந்து விழுந்தார். உடனே அந்த இரு இளைஞர்களும் துப்பாக்கியை அப்படியே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். அப்போதாவது அவர்களை பொதுமக்கள் மடக்கி பிடித்திருக்கலாம்.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிதறி கிடந்த அவரது பொருட்களில் இருந்த ஐடி கார்டை வைத்து துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்ணின் பெயர் ரோஷினி என்பது தெரியவந்தது. ரோஷினிக்கு தெரிந்த நபர்கள்தான் இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருக்க முடியும் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீஸார் 4 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக ராஜீ என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பெண்ணுடன் தான் காதலில் இருந்து வந்ததாக தெரிவித்தார். மேலும் தனக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தன்னை அந்த பெண் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த அந்த இளைஞர், ரோஷினியை சமாதானப்படுத்த அவருடன் பேச முயற்சித்தார். ஆனால் அந்த பெண்ணோ பேச மறுத்துள்ளார்.
சம்பவத்தினத்தன்று கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு வந்த அந்த பெண்ணை வழிமறித்து ராஜீ பேச முயற்சித்தார். ஆனால் அந்த பெண் மீண்டும் பேச மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த ராஜீ தன்னிடம் இருந்த துப்பாக்கியை வைத்து அந்த பெண்ணை சுட்டுக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் தன்னை போலீஸார் அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக இரு சக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டை கழற்றி கால்வாயின் அடியில் வைத்தாராம். அது போல் அவருடைய துணிகளை மோப்ப நாய் மோப்பம் பிடித்து கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக பேத்வா ஆற்றில் வீசினாராம். இதையடுத்து மேற்கண்ட இடங்களுக்கு போலீஸார் ராஜீவை அழைத்து சென்றனர்.
அங்கு அவர் மறைத்த நம்பர் பிளேட்டையும் ஆற்றில் வீசிய துணியையும் பறிமுதல் செய்தனர். அப்போது திடீரென ராஜீ, இன்ஸ்பெக்டரிடம் இருந்த துப்பாக்கியை பறித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் எத்தனை முறை கேட்டும் அவர் துப்பாக்கியை கொடுக்கவில்லை. உடனே அந்த இன்ஸ்பெக்டர் மீது சுட்டார். இதில் அவர் காயமடைந்தார். உடனே போலீஸார் தற்காப்புக்காக தப்பியோட முயன்ற ராஜீயின் காலில் சுட்டனர். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை












Click it and Unblock the Notifications