"மாடு வெட்டாதீங்க".. பக்ரீத் கொண்டாட்டத்தில் 50 பேருக்கு மேல் கூட கூடாது.. உபியில் யோகி போட்ட தடை
பக்ரீத் பண்டிகைக்கு உபியில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது
லக்னோ: குர்பானிக்காக மாடுகள், ஒட்டகங்களை பலியிடக்கூடாது என்று உபி முதல்வர் யோகி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2 மாதத்துக்கு முன்பிருந்ததைவிட, நாட்டில் தற்போது தொற்று மெல்ல குறைந்து வருகிறது.. எனினும், 3வது அலை வரப்போவதாக எச்சரிக்கைகள் வந்துகொண்டிருக்கின்றன..
ஐஎம்ஏ என அழைக்கப்படும் மருத்துவர் சங்கமும் இந்த 3-வது அலை தொடர்பாக எச்சரிக்கை விடுத்து இருந்தது இந்தநிலையில் இந்த ஆண்டு கன்வர் யாத்திரையை நடத்த உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன.

தொற்று
இந்து கடவுளான சிவனின் பக்தர்கள் 2 வாரம் நடத்துவது தான் கன்வர் யாத்திரை... இதற்காக பல பகுதிகளில் இருந்து ஹரித்துவார், ரிஷிகேஷ் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் ஆண்டுதோறும் பாத யாத்திரயைாக செல்வது வழக்கம்... அதன்படி, இந்த வருடமும் ஜூலை 25 ம் தேதி இது தொடங்குவதாக இருந்தது.

தடை
இந்த கன்வர் யாத்திரை நடத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாகவே முன்வந்து விசாரித்து வந்தது.. ஆனால் தொற்று பரவல் இருப்பதை கருத்தில் கொண்டு அந்த யாத்திரையை நடத்தும் முடிவை உபி அசு மறுபரிசீலனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டும் அறிவுறுத்தியிருந்தது.. ஆனாலும் இந்த வருடம் யாத்திரையை அனுமதிக்க வேண்டாம் என்று உபி அரசு முடிவு செய்துள்ளதாக அந்த மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது.. இதையடுத்து இந்த வழக்கும் முடித்து வைக்கப்பட்டது..

கட்டுப்பாடு
இப்படிப்பட்ட சூழலில், உபியில் மற்றொரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.. பக்ரீத் கொண்டாட்டங்களின்போது பொது இடங்களில் 50 பேருக்கு மேல் கூட்டமாக இருக்க கூடாது என உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். குர்பானிக்காக மாடுகள் அல்லது ஒட்டகங்களை பலியிடக்கூடாது என்றும், பொது இடங்களில் குர்பானி நிகழ்வுகள் நடத்தப்படக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

வழக்கு
முன்னதாக, பக்ரீத் பண்டியை முன்னிட்டு கேரளாவில் 19ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படுவதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.. ஆனால், கேரள அரசு இந்த முடிவை எடுத்திருப்பது எதிர்பாராத ஒன்றாகும் என்று இந்திய மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. அந்த மனு தொடர்பாக பதிலளிக்க கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications