உ.பி. உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி: காங், சமாஜ்வாதி கோட்டைகளான அமேதி, ரேபரேலி, மெயின்புரி பாஜக வசம்
லக்னோ: உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ளது பா.ஜ.க. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளின் கோட்டைகளாக கருதப்படும் ரேபரேலி, அமேதி, மெயின்புரி அத்தனையும் இப்போது பாஜக வசமாகிவிட்டது.
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி.யில் ஆளும் பாஜக அரசு மீது கடும் அதிருப்தி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த அதிருப்தியை சமாளிக்க பாஜக படுதீவிரமான நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது.
இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றான மாவட்ட தலைவர் எனப்படும் ஜில்லா பஞ்சாயத்து தலைவர் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மொத்தம் 75 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடவில்லை.

அமோக வெற்றி பெற்ற பாஜக
பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் நின்றன. சில இடங்களில் காங்கிரஸும் சமாஜ்வாதி கட்சியும் பொதுவேட்பாளர்களை நிறுத்தின. ஆனால் பாஜகவும் அதன் கூட்டணி கட்சியும் மொத்தம் 67 இடங்களைக் கைப்பற்றி உள்ளன. சமாஜ்வாதி கட்சிக்கு 5 இடங்கள்தான் கிடைத்தன. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.

கோட்டையை பறிகொடுத்த எஸ்.பி
சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம்சிங் யாதவின் சொந்த லோக்சபா தொகுதி மெயின்புரி. கடந்த 30 ஆண்டுகளாக ஜில்லா பஞ்சாயத்து தலைவர் பதவி சமாஜ்வாதி கட்சி வசம்தான் இருந்தது. ஆனால் இம்முறை சமாஜ்வாதி கட்சியின் கோட்டையான மெயின்புரியை பாஜக கைப்பற்றிவிட்டது.

ரேபரேலி, அமேதி
அதேபோல் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதிகள் அமேதி, ரேபரேலி. நேரு குடும்பத்தின் கோட்டையாக திகழ்ந்த இந்த இடங்களும் இப்போது பாஜக வசமாகிவிட்டன. இத்தனைக்கும் அமேதியில் சமாஜ்வாதிக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாமல் ஆதரவு தெரிவித்தது. ஆனாலும் சமாஜ்வாதி கட்சியால் வெல்ல முடியாமல் போனது.

பாஜக மீது புகார்
சமாஜ்வாதி கட்சி வலிமையாக இருக்கக் கூடிய கன்னோஜ், ஃபிரோசாபாத் ஆகிய இடங்களும் கூட பாஜகவின் பிடியில் சிக்கி உள்ளன. ஆனால் உ.பி.யில் ஆளும் பாஜக அரசுதான் தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு இத்தகைய வெற்றியை பெற்றுள்ளதாக சமாஜ்வாதி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பிரியங்காவுக்கு பின்னடைவு
இன்னொருபுறம் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு உயிர் கொடுக்கும் வகையில் பிரியங்கா காந்திதான் பொறுப்பாளராக இருக்கிறார். இது பிரியங்கா காந்திக்கு மிகப் பெரிய தோல்வியாக் கருதப்படுகிறது. சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பாஜக, பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது அக்கட்சியினரை உற்சாகப்படுத்தி உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications