பயங்கர ஷாக்.. கிரிக்கெட் விளையாடிய பின் கூலிங் வாட்டர் குடித்த மாணவன் சுருண்டு விழுந்து பலி! பின்னணி
லக்னோ: வெயிலில் கிரிக்கெட் விளையாடிவிட்டு கூலிங் தண்ணீரை குடித்த 10ம் வகுப்பு மாணவர் அப்படியே மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த ஷாக் தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போதைய சூழலில் மரணம் என்பது வெவ்வேறு ரூபங்களில் மனிதர்களுக்கு வருகிறது. பரோட்டோ, ஷவர்மா, சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டு கூட சிலர் இறக்கும் செய்திகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் நிலையில் தான் தற்போது இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. கிரிக்கெட் விளையாடிவிட்டு கூலிங் வாட்டரை குடித்த 10ம் வகுப்பு மாணவனின் உயிர் போய் உள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த விபரம் வருமாறு:
உத்தர பிரதேச மாநிலம் அல்மோரா மாவட்டம் ஹாசன்பூரில் உள்ள காயஸ்தான் பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் சாய்னி. இவருக்கு வயது 17. 10ம்வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கிரிக்கெட் என்றால் அதிக பிரியம். இதனால் இந்தியா விளையாடும் கிரிக்கெட் போட்டிகளில் முழுவதுமாக பார்த்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
அதோடு பள்ளி விடுமுறை நாட்களில் நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவது தான் இவரது பொழுதுபோக்காகும். இந்நிலையில் தான் நேற்று சனிக்கிழமை. பள்ளி விடுமுறையையொட்டி பிரின்ஸ் சாய்னி நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் செய்து அவர் விளையாடினார். ஒரு கட்டத்தில் அவர்கள் அனைவரும் விளையாட்டை முடித்தனர்.

இந்த வேளையில் தாகம் அதிகமாக இருந்தததால் பிரின்ஸ் சாய்னி கூலிங் தண்ணீரை எடுத்து குடித்தார். இதையடுத்து அவர் திடீரென்று மயங்கினார். பேச்சு மூச்சின்றி அவர் மயங்கிய நிலையில் நண்பர்கள் உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் பிரின்ஸ் சாய்னியை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பிரின்ஸ் சாய்னியின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கதறி அழுதனர். இருப்பினும் பிரின்ஸ் சாய்னியின் சாவுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. கிரிக்கெட் விளையாடி முடித்து கூலிங் தண்ணீரை குடித்த அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அது உறுதி செய்யப்படவில்லை. இதுபற்றி போலீசில் புகார் எதுவும் செய்யப்படவில்லை.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications