திடீரென மாயமான மனைவி.. ‘பக்கோடா' வாங்கபோன ‘கேப்பில்' காதலனுடன் எஸ்கேப்? புதுமாப்பிள்ளைக்கு சோகம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பஸ் நிலையத்தில் நின்ற மனைவி வயிறு பசிக்கிறது பக்கோடா வாங்கி தாங்க என கணவரிடம் கேட்டார். கணவர் பக்கோடா வாங்க அருகே உள்ள கடைக்கு சென்றார். இந்த 'கேப்பில்' அந்த பெண் திடீரென்று மாயமான நிலையில் அவர் தனது காதலனுடன் எஸ்கேப் ஆகி உள்ளதாக கணவர் பரபரப்பான புகாரளித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரித்தம் சிங். இவருக்கும் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது நிரம்பிய ரிம்ஜிம் என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி திருமணம் நடந்தது. சமீபத்தில் ஹோலி பண்டிகை வந்தது.

இதையடுத்து ஹோலி பண்டிகையை தனது தாய் வீட்டில் கொண்டாட ரிம்ஜிம் முடிவு செய்தார். இதனால் தாய் வீட்டுக்கு செல்ல பிரித்தம் சிங்கிடம் அனுமதி கோரினார். அவருக்கு அனுமதி வழங்கினார்.
ஹோலி கொண்டாட்டம்
இதையடுத்து ரிம்ஜிம் தனது தாய் வீட்டுக்கு சென்று ஹோலி பண்டிகையை கொண்டாடினார். ஹோலி பண்டிகை முடிந்து பல நாட்கள் ஆனபோதிலும் கூட ரிம்ஜிம் மீண்டும் தனது கணவர் பிரித்தம் சிங் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் பிரித்தம் சிங்கே, நேரடியாக மனைவியின் வீட்டுக்கு சென்றார். அதன்பிறகு அவரை அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து சென்றார். இருவரும் பஸ்சில் புறப்பட்டனர்.
பக்கோடா கேட்ட மனைவி
இந்த பஸ் மொராடாபாத் மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையத்தில் வந்து நின்றது. இருவரும் அங்கிருந்து வேறு பஸ்சில் புறப்பட வேண்டும். இதனால் இருவரும் பஸ் நிலையத்தில் இறங்கினர். இந்த வேளையில் ரிம்ஜிம் தனக்கு வயிறு பசிக்கிறது. 'பக்கோடா' வாங்கி தாருங்கள் என்று கணவர் பிரித்தம் சிங்கிடம் கூறினார்.
மாயமான மனைவி
இதையடுத்து பிரித்தம் சிங் தனது மனைவிக்கு பக்கோடா வாங்க அருகே உள்ள கடைக்கு சென்றார். சிறிது நேரத்தில் பக்கோடா வாங்கி கொண்டு அவர் திரும்பினார். அப்போது அவரது மனைவி மாயமானார். பக்கத்தில் 'ரெஸ்ட்ரூம்' சென்றிருக்கலாம் என்று நினைத்தார். இதனால் அவர் சிறிது நேரம் காத்திருந்தார்.
காதலனுடன் எஸ்கேப்?
ஆனால் மனைவி ரிம்ஜிம் வரவில்லை. இதனால் சந்தேகம் வலுத்தது. அவரது செல்போனை தொடர்பு கொண்டார். அது 'ஸ்விட்ச்ஆப்' என்று வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரித்தம் சிங் தனது மனைவியை பஸ் நிலையம் முழுவதும் தேடினார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. உடனடியாக அவர் ரிம்ஜிம் பெற்றோருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். அவர்களும் ஆங்காங்கே விசாரித்தனர்.
அதேபோல் பிரித்தம் சிங்கும் தேடிப்பார்த்தார். எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் வேறு வழியின்றி பிரித்தம் சிங் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரித்தம் சிங்கிடம் விசாரித்தனர். அப்போது அவர் தனது மனைவியை அவரது கிராமத்தை சேர்ந்த இளைஞருடன் ஓடிச்சென்று இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தார். இதுபுற்றி போலீசார் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக பஸ் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு மேற்கொண்டனர். அதோடு ரிம்ஜிம்மின் செல்போன் லொகேஷனை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications