அதென்ன 'மோடி' மாம்பழம்.. விரைவில் சந்தைக்கு வருதாமே.. அப்படி என்ன ஸ்பெஷல் இருக்கு.. இவ்ளோ விலையா?
லக்னோ: சந்தைகளில் எத்தனையோ ரகங்களில் மாம்பழங்கள் விற்பனையாகி வரும் நிலையில், புதிதாக மோடி மாம்பழம் அறிமுகம் ஆகியிருக்கிறதாம். புதிய ரக மாம்பழத்திற்கு இந்த பெயர் எப்படி வந்தது என்பது குறித்தும் சுவாரசிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
மாம்பழ சீசன் களை கட்டியிருக்கிறது. பொதுவாக கோடைக்காலத்தில் மாம்பழ விளைச்சல் அமோகமாக இருக்கும். பழக்கடைகளில் மலை போல குவித்து வைக்கப்பட்டு இருக்கும் மாம்பழங்களை பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும். மாம்பழங்களில் மல்கோவா மாம்பழம்.. அல்போன்சா.. கிளி மூக்கு.. பங்கன பள்ளி.. என பல்வேறு ரகங்கள் உள்ளன.

அந்த வரிசையில் தற்போது புதிதாக மோடி மாம்பழம் ஒன்று முளைத்திருக்கிறது. மாம்பழத்திற்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்கான சுவாரசிய காரணங்களை இங்கே விரிவாக பார்க்கலாம். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மலிஹாபாத்தை சேர்ந்த மாம்பழ ஆராய்ச்சியாளர் உபேந்திர சிங்.
புதுவித டேஸ்ட்: பல்வேறு விதமான மாம்பழங்களை ஆராய்ச்சி செய்து வரும் இவரது கண்ணுக்கு புது விதமான ஒரு மாம்பழம் தென்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் 56 அங்குல மார்பு பேச்சை நினைவு படுத்தும் வகையில் இந்த மாம்பழம் இருந்ததால் உடனடியாக இந்த மாம்பழத்திற்கு மோடியின் பெயரை வைக்க முடிவு செய்து இருக்கிறார் உபேந்திர சிங்.
இதைத்தொடர்ந்து இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலில் மோடியின் பெயரில் இந்த புதிய ரக மாம்பழத்தை பதிவு செய்து இருக்கிறார். மாம்பழத்தையும் ஆய்வகத்தில் இருந்தவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார். ஆய்வகத்தில் இருந்தவர்களும் மாம்பழத்தின் சுவை வித்தியாசமாக இருந்ததை உணர்ந்துள்ளனர்.
மோடி மாம்பழம் என்ற பெயரில் இதை பதிவு செய்து சான்றிதழையும் வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் வழங்கியிருக்கிறது. லக்னோ அருகே உள்ள மலிஹாபாத்தில் அதிகம் கிடைக்கும் உலகப் புகழ் பெற்ற மாம்பழ வகையான தஸ்ஸேரியைப் போலவே, இந்த மோடி மாம்பழமும் மிகுந்த ருசி கொண்டதாக இருக்கிறதாம்.
உருவானது எப்படி? : மாம்பழ விளைச்சல் அதிகமாக இருக்கும் லக்னோவில் இரண்டு மாம்பழ வகைகளை இணைத்து புதிய மாம்பழங்களை உருவாக்கியதாக உபேந்திர சிங் கூறினார். இந்த புதிய ரக மாம்பழம் சராசரியாக 450 கிராம் எடை இருக்குமாம். 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் இந்த மாம்பழம் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும் அந்த சமயத்தில் சந்தைக்கு விற்பனைக்கு வரவில்லை. அடுத்த வருடம் இந்த மாம்பழம் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாம்பழம் சந்தைக்கு வரும் போது மிகவும் காஸ்ட்லியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த புதிய ரகமான மோடி மாம்பழங்களின் ஆயிரம் மரக்கன்றுகள் விற்பனைக்கு தயராக இருப்பதாக கூறும் புபேந்திர சிங், ஒரு மரக்கன்றின் விலை ஆயிரத்திற்கு மேல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம். இந்த மாம்பழங்களுக்கு மவுசு கூடும் போது இதன் டிமாண்ட் அதிகமாகும் என்று நம்பிக்கையோடு கூறி வருகிறார் உபேந்திர சிங்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications