உ.பி தேர்தல்: முதல்முறை களமிறங்கிய ஆதித்யநாத்.. கோரக்பூரில் இன்று வாக்குப்பதிவு.. விறுவிறுப்பு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாஜக சார்பாக முதல்வர் ஆதித்யநாத் போட்டியிடும் கோரக்பூர் தொகுதியிலும் இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
உத்தர பிரதேசத்தில் இன்று 6ம் கட்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. இன்று மொத்தம் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது
உத்தர பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளில் 292 தொகுதிகளில் ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இன்று 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கும். இது போக மீதம் உள்ள 54 தொகுதிகளில் அடுத்த கட்டத்தில் தேர்தல் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோரக்பூர்
இந்த முறை கோரக்பூர் தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார். சட்டசபை தேர்தலில் முதல்முறையாக அவர் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அவர் எம்பியாக இருந்துள்ளார். சட்ட மேலவை மூலமாக எம்எல்ஏ ஆகி இருக்கிறார். ஆனால் நேரடியாக தேர்தலில் போட்டியிட்டு அவர் எம்எல்ஏ ஆனது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோரக்பூர் தொகுதி ஆதித்யநாத் மிகவும் வலுவாக இருக்கும் தொகுதியாகும்.

யோகி ஆதித்யநாத்
இங்கு கடந்த 70 வருடமாக ஜனசங்க காலத்தில் இருந்து பாஜக தோல்வி அடைந்ததே இல்லை. ஐந்து முறை கோரக்பூர் தொகுதியில் இருந்து எம்பியாக வெற்றிபெற்று ஆதித்யநாத் லோக்சபாவிற்கு சென்றுள்ளார். இவர் முதலில் அயோத்தி தொகுதியில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் அயோத்தியில் பாஜக அவ்வளவு வலிமை இல்லை என்று செய்திகள் வந்தன. உள்ளாட்சி தேர்தலிலும் அங்கு பாஜக தோல்வி அடைந்தது. எனவே ரிஸ்க் எதுவும் எடுக்காமல்.. வலுவான கோரக்பூர் தொகுதியை ஆதித்யநாத் தேர்வு செய்து இருக்கிறார்.

சமாஜ்வாதி
சமாஜ்வாதி சார்பாக இங்கு சுபாவதி சுக்லா என்ற பெண் போட்டியிடுகிறார். இவர் பிரமாண சமூகத்தை சேர்ந்தவர். இங்கு பிராமணர்கள் வாக்கு அதிகம் உள்ளது. அதனால் சமாஜ்வாதி இவரை களமிறக்கி உள்ளது. அதே சமயம் இஸ்லாமியர்கள், இடைநிலை சாதியினர், தலித் மக்களின் வாக்குகளும் இங்கு கணிசமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு கடும் போட்டி நிலவி வருகிறது.

மவுரியா போட்டி
இன்னொரு பக்கம் சமாஜ்வாதி சார்பாக இன்று சுவாமி பிரசாத் மவுரியா போட்டியிடும் பாசில்நகர் தொகுதியிலும் தேர்தல் நடக்கிறது. இவர் முன்னாள் பாஜக நிர்வாகி, அதேபோல் முன்னாள் அமைச்சர். வலிமையான ஓபிசி பிரிவு தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் இன்று இவரின் தொகுதியிலும் தேர்தல் நடக்க உள்ளது.
-
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications